ADDED : பிப் 24, 2024 06:32 AM

பாகூர் : பிள்ளையார்குப்பம் மகாத்மா காந்தி மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 'மெட்ரிகான் - 2024' என்ற தலைப்பிலான இரண்டு நாள் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடந்தது.
மகாத்மா காந்தி மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மருத்துவ பதிவேட்டு துறை, ெஹல்த் ரெக்கார்ட்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியாவும் இணைந்து நடத்திய கருத்தரங்கிற்கு, பாலாஜி வித்யா பீத் நிகர்நிலை பல்கலைக்கழக துணை வேந்தர் நிகர் ரஞ்சன் பிஸ்வாஸ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மத்திய சுகாதார புலனாய்வு பணியகம் துணை இயக்குனர் ஜெனரல் மதுரைக்வர், ஹெல்த் ரெக்கார்ட்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா தலைவர் சுரேஷ் கால்டன் கலந்து கொண்டு பேசினார்.
மகாத்மா காந்தி மருத்துவ கல்லுாரி முதல்வர் சீத்திஷ் கோஷ், இயக்குனர் நிர்மல்குமார், பொது மேலாளர் ஆஷா சுரேஷ்பாபு ஆகியோர் வாழ்த்தி பேசினர். கருத்தரங்கில், ஹெல்த் இன்பர்மேட்டிக்ஸ் சர்பேசிங் அங்கீகாரம், மருத்துவ சட்டம், குறியீட்டு சவால்கள், மருத்துவப் பதிவுகளில் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் புதுமையான முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகள் விவாதிக்கப்பட்டது.
கருத்தரங்கினை டாக்டர் கார்த்திகேயன், சரவணமுருகன், குமரேஷ் ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினர். மாணவர்கள், ஊழியர்கள், மருத்துவர்கள் என 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.