/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வெங்கடேஸ்வரா கல்லுாரியில் தேசிய அளவிலான பயிலரங்கு
/
வெங்கடேஸ்வரா கல்லுாரியில் தேசிய அளவிலான பயிலரங்கு
ADDED : ஜன 29, 2025 06:24 AM

வில்லியனுார் : அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லுாரியில் ஆராய்ச்சி குறித்து தேசிய அளவிலான பயிலரங்கு நடந்தது.
கல்லுாரி சேர்மன் ராமச்சந்திரன் வழிகாட்டுதலின் படி நிகழ்ச்சிக்கு மருத்துவ கல்லுாரி முதல்வர் ஜெயராமன் தலைமை தாங்கினார். கல்வி குழுமத்தின் ஆலோசகர் வெங்கட்ராமன் வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக அமெரிக்கா ஒரேகான் மாநில பல்கலைக் கழக பேராசிரியர் சூசன் எம்ஷா மற்றும் புதுச்சேரி பல்கலைக்கழக ஐரோப்பிய ஆய்வு மையத்தின் தலைவர்கமலவேணி ஆகியோர் ஆராய்ச்சி, மானியம் எழுதுதல் முதல் கருத்து முன் மொழிவுகளை சமர்ப்பித்தல் வரையிலான பயிற்சிகள் குறித்து பேசினர்.
விழாவில் 120க்கும் மேற்பட்ட கல்லுாரி பேராசிரியர்கள், முதுகலை மாணவர்கள் பங்கேற்றனர். கல்லுாரி துணை முதல்வர் நிர்மலா நன்றி கூறினார். ஏற்பாடுகளை பேராசிரியர்கள் சிவகுமார், பிரியங்கா மற்றும் கண்மணி ஆகியோர் செய்தனர்.