ADDED : அக் 12, 2025 10:47 PM

புதுச்சேரி; புதுச்சேரி காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தில், பிரதமரின் கிசான் தன் தானிய கிருஷி யோஜனா மற்றும் தேசிய பயிறு வகை பயிற்சிகளுக்கான திட்டங்கள் குறித்த நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, தொழில்நுட்ப வல்லுநர் அமலோற் பவநாதன் வரவேற்றார். வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ரவி துவக்கவுரையாற்றினார். நெல் நிபுணர் நரசிம்மன், வேளாண் இணை இயக்குநர்கள் முத்துகிருஷ்ணன், சண்முக வேலு, துணை இயக்குநர் குமாரவேலு ஆகியோர் நோக்கவுரையாற்றினர். கூடுதல் இயக்குநர் செழியன் பாபு சிறப்புரையாற்றினார்.
இயற்கை விவசாயத்தில் உயிரியல் கட்டுப்பாட்டு நுண்ணுயிர்களின் பங்கு பற்றி நோயியல் நிபுணர் மணிமேகலை பேசினார். பருப்பு வகைகளின் மதிப்பு கூட்டல் பற்றி திட்ட உதவியாளர் பொம்மி பேசினார்.
தொழில்நுட்ப வல்லுநர் பிரபு, இயற்கை வேளாண் இடுபொருள் உள்ளீட்டு தயாரிப்பு குறித்து பேசினார். விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மை செயல்விளக்கம் அளிக்கப்பட்டு, இயற்கை இடுபொருள் வழங்கப்பட்டது.
கால்நடை மருத்துவர் சித்ரா நன்றி கூறினார்.