/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேசிய பள்ளி சாம்பியன்ஷிப் போட்டி புதுச்சேரி அணிக்கு வீரர்கள் தேர்வு

ADDED : ஆக 21, 2025 06:57 AM

புதுச்சேரி : தேசிய பள்ளி விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டிக்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
புதுச்சேரி பள்ளிக் கல்வி இயக்குநரகம், 2025-26ம் ஆண் டிற்கான 69வது தேசிய பள்ளி விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டிக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் அணியை தேர்வு செய்ய, இரு கட்டங்களாக தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக புதுச்சேரி பகுதியை சேர்ந்தவர்களுக்கு 18 மற்றும்19ம் ஆகிய தேதிகளில் தேர்வு ம், இரண்டாம் கட்டமாக, வரும் 30ம் தேதி, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு புதுச்சேரியில் தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, லாஸ்பேட்டை ஸ்கேட்டிங் மைாதனத்தில் ஸ்கேட்டிங் விளையாட்டு போட்டிக்கு, 14, 17 மற்றும் 19 ஆகிய வயதுக்குட்பட்ட வீரர்கள் கடந்த 18 ம் தேதி தேர்வு செய்யப்பட்டனர். விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் வீரர்களை தேர்வு செய்தனர்.