தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சாரதா கங்காதரன் கல்லுாரியில் தேசிய அறிவியல் தினம்

 சாரதா கங்காதரன் கல்லுாரியில் தேசிய அறிவியல் தினம்

 சாரதா கங்காதரன் கல்லுாரியில் தேசிய அறிவியல் தினம்


ADDED : மார் 06, 2026 04:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 06, 2026 04:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி சாரதா கங்காதரன் கல்லுாரியில் அறிவியல் கழகம் மற்றும் ஐ.கியூ.ஏ.சி., சார்பில் அறிவியலில் பெண்கள், வினையூக்கி விக்சித் பாரத் என்ற தலைப்பில் தேசிய அறிவியல் தினம் நடந்தது.

கல்லுாரி முதல்வர் பாபு தலைமை தாங்கினார். தாகூர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் உதவி பேராசிரியர் சிவகாமசுந்தரி கலந்து கொண்டு, இந்தியாவின் முன்னேற்றத்திற்கும், நவீன வடிவமைப்பிற்கும் பெண் முன்னோடிகளின் முக்கிய பங்களிப்பை எடுத்துரைத்தார்.

முன்னதாக, கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கு இடையே நடந்தப்பட்ட கட்டுரை எழுதுதல், வரைதல், போஸ்டர் வழங்கல் மற்றும் புகைப்படப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை இயற்பியல் மற்றும் கணிதத் துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us