/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கோவில் கும்பாபிேஷகம் : தி.மு.க., நிர்வாகி தரிசனம்
/
கோவில் கும்பாபிேஷகம் : தி.மு.க., நிர்வாகி தரிசனம்
கோவில் கும்பாபிேஷகம் : தி.மு.க., நிர்வாகி தரிசனம்
கோவில் கும்பாபிேஷகம் : தி.மு.க., நிர்வாகி தரிசனம்
ADDED : மார் 06, 2026 04:12 AM

புதுச்சேரி: மங்கலம் தொகுதி சிவராந்தகம் பேட் ஆதியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் தி.மு.க., பொறுப்பாளர் ரங்கன் சுவாமி தரிசனம் செய்தார்.
மங்கலம் தொகுதி சிவராந்தகம் பகுதியைச் சேர்ந் த ரங்கன், தி.மு.க., அமைப்பாளர் சிவா தலைமையில் சென்னை அறிவாலயத்தில் தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் முன்னிலையில் கடந்த 23ம் தேதி தி.மு.க.,வில் இணைந்தார்.
மங்கலம் தொகுதியில் நிர்வாகிகள், மொழிப்போர் தியாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருவதுடன், பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று சிவராந்தம்பேட்டில் நடந்த ஆதியம்மன் கோவில் மகா கும்பாபிேஷகத்தில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, கோவில் திருப்பணிக்காக நிர்வாகிகளிடம் ரூ. 50 ஆயிரம் நிதி வழங்கினார். முன்னதாக, ரங்கனுக்கு கோவில் நிர்வாகம் சார்பில், பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
இதில், நிர்வாகிகள் முரளி, ஸ்ரீஹரி, அய்யனார், தொகுதி இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஸ்டாலின், தமிழ், அபிம்மன்னன், இளவழகன், யுவராஜ், உதயகுமார், சிவபாலன், காந்திவரதன், கிருஷ்ணமூர்த்தி, கோவில் நிர்வாகிகள் மாயவன், கலியமூர்த்தி, கந்தசாமி, ஏகாம்பரம், பக்கிரி, ஆனந்தன், அங்காளன், கெங்கமுத்து, ராமலிங்கம், ராமச்சந்திரன், தேவநாயகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

