/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
எம்.ஐ.டி., கல்லுாரியில் தேசிய கருத்தரங்கம்
/
எம்.ஐ.டி., கல்லுாரியில் தேசிய கருத்தரங்கம்
ADDED : மே 04, 2025 04:01 AM

புதுச்சேரி,: கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி., கல்லுாரி) மேலாண்மைத் துறை சார்பில், 'நிலையான வளர்ச்சிக்கான வணிக மற்றும் நிர்வாகத்தில் சமகால சவால்கள்' என்ற தேசிய அளவிலான கருத்தரங்க மாநாடு நடந்தது.
மணக்குள விநாயகர் கல்விக் குழுமத் தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். கல்லுாரி முதல்வர் மலர்க்கண் வரவேற்றார். செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன், இணை செயலாளர் வேலாயுதம் முன்னிலை வகித்தனர். புதுச்சேரி பல்கலைக் கழக மேலாண்மைத் துறை தலைவர் காசிலிங்கம் துவக்கி வைத்தார்.
மேலாண்மை துறை தலைவர் பாஸ்கரன் மாநாடு விளக்கவுரையாற்றினார். கல்லுாரி ஐ.கியூ.ஏ.சி., ஹெட் மற்றும் ஆராய்ச்சி அபிவிருத்தி துறை தலைவர் வள்ளி, ஐக்கிய நாடுகள் நிர்ணயம் செய்த நிலையான வளர்ச்சி இலக்குகள் பற்றி விளக்கினார்.
மாநாட்டில் 200க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். கருத்தரங்கத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வு கட்டுரைகளில் 55 கட்டுரைகள், விளக்க காட்சிக்கு தேர்வு செய்யப்பட்டன.
பி.எஸ்., அப்துர் ரஹ்மான் கிரசண்ட் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி பேராசிரியர் ரபியா பானு, எஸ்.ஆர்.எம்.பல்கலைக் கழக பேராசிரியர் கமலக்கண்ணன், புதுச்சேரி பல்கலைக் கழக பேராசிரியர் திவ்யதர்ஷினி ஆகியோர் தலைமையில் கருத்தரங்க அமர்வுகள் நடந்தன.
ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் மன்சூர் இப்ராஹிம், கலைவாணி, மனோஜா, நிஷாந்த் ஆகியோர் செய்திருந்தனர். ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் வைத்தீஸ்வரன் நன்றி கூறினார்.