/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேசிய சித்த மருத்துவம் தின விழிப்புணர்வு ஊர்வலம்
/
தேசிய சித்த மருத்துவம் தின விழிப்புணர்வு ஊர்வலம்
தேசிய சித்த மருத்துவம் தின விழிப்புணர்வு ஊர்வலம்
தேசிய சித்த மருத்துவம் தின விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : ஜன 09, 2026 08:14 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் தேசிய சித்த மருத்துவ தினத்தையொட்டி, நடந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.
சித்த மருத்துவத்தின் தந்தை மற்றும் முதல் சித்தரான அகத்தியரின் பிறந்த நாளை, தேசிய சித்த மருத்துவ தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, ஆயுஷ் துறையின் கீழ் இயங்கும் சித்த மருத்துவ பிரிவு சார்பில், புதுச்சேரி, காரைக்கால் மற்றும் மாகேவில் உள்ள அனைத்து சித்த மருத்துவ பிரிவுகளிலும், 9வது தேசிய சித்த மருத்துவ தினம் கொண்டாடப்பட்டது.
இதனையொட்டி, சித்த மருத்துவம் விழிப்புணர்வு ஊர்வலம், புதுச்சேரி பாரதி பூங்காவில் மரம் நடும் விழா, ஆயுஷ் இயக்குனரக வளாகத்தில் இலவச சித்த மருத்துவ முகாம் ஆகிய முப்பெரும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு, விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் சித்த மருத்துவ முகாமினை துவக்கி வைத்து, பாரதி பூங்காவில் மரக்கன்றுகளை நட்டார். நிகழ்ச்சியில், அமைச்சர் லட்சுமி நாராயணன், ஆயுஷ் இயக்குநர் இந்திரா, துறை அதிகாரிகள், சித்த மருத்துவர்கள், மருந்தாளுநர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

