தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு :சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு விருது வழங்கல்

 தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு :சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு விருது வழங்கல்

 தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு :சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு விருது வழங்கல்


ADDED : ஜன 26, 2026 04:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 26, 2026 04:27 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: 'என் இந்தியா என் வாக்கு' எனும்2026க்கான தேசிய கருப்பொருளை மையமாகக் கொண்டு, புதுச்சேரி தேர்தல் துறை சார்பில், 16வது தேசிய வாக்காளர் தின விழா நேற்று கம்பன் கலை அரங்கத்தில் நடந்தது.

விழாவில் துணை தலைமை தேர்தல் அதிகாரி தில்லைவேல் வரவேற்றார். கலெக்டர் குலோத்துங்கன், வாழ்த்தி பேசினார். தலைமை தேர்தல் அதிகாரி ஜவஹர் சிறப்புரையாற்றினார்.

துணை தலைமை தேர்தல் அதிகாரி கந்தசாமி நன்றி கூறினார்.

அரசு அதிகாரிகள், கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விழாவின் ஒரு பகுதியாக முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்கள் கவுரவிக்கப்பட்டனர். வாக்காளர் உறுதிமொழி ஏற்றனர்.

தேர்தல் மேலாண்மை மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு பணிகளில் சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு 2026ம் ஆண்டிற்கான மாநில அளவிலான விருதுகள் வழங்கப்பட்டன.

வாக்காளர் பதிவு அதிகாரிகளுக்கான சிறந்த தேர்தல் நடைமுறைகள் விருது அங்கித் குமார் ஐ.ஏ.எஸ்., குமரன்,சவுந்தரி மற்றும் அருணகிரிநாதன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

மொத்த ஒருங்கிணைப்புக்கான சிறப்பு அங்கீகார விருது புத்தி அகில் ஐ.ஏ.எஸ்., இணை தலைமை தேர்தல் அதிகாரி ஆதர்ஷ்,நிரலாளர் சிவஞான கணேசன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

சிறந்த உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகள் துணை வட்டாட்சியர்களுக்கான விருது சந்தோஷ் குமார், மணிகண்டன், ஷண்முகானந்தம், செல்லமுத்து, மனோஜ் வாலவில் மற்றும் ரூபலா ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

தொழில்நுட்ப உதவிக்கான சிறப்பு விருது ராஜ்குமார், சிறந்த தேர்தல் அலுவலர் விருது சத்தியமூர்த்தி, சரவணகுமார் மற்றும் ராஜேஷ் கண்ணா ஆகியோருக்கும் வழங்கப்பட்டது. ஊடக ஒருங்கிணைப்பாளர் சிறப்பு விருது தகவல் மற்றும் விளம்பர இயக்குநரகத்தைச் சேர்ந்த மக்கள் தொடர்பு அதிகாரி கணபதிக்கு வழங்கப்பட்டது.

புதுச்சேரி மாநில நாட்டு நலப்பணித் திட்ட தன்னார்வலர்கள் மற்றும் முருங்கப்பாக்கம் ராஷ்ட்ரிய ரக் ஷா பல்கலைக்கழகம், முத்தியால்பேட்டை பாரதிதாசன் அரசு பெண்கள் கல்லுாரி, வம்பாக்கீரப்பாளையம் அரசு பெண்கள் தொழில்நுட்ப கல்வி நிறுவனம், மணக்குள விநாயகர் தொழில்நுட்ப நிறுவனம், பொறியியல் கல்லுாரி, விவசாய அறிவியல் கல்லுாரி மாணவர்கள் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த இயக்கத்தில் உதவினர்.

இந்த நிறுவனங்களின் சிறந்த பங்களிப்புகளுக்காக கவுரவிக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன. தொலைதுார மற்றும் பின்தங்கிய பகுதிகளில் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் டெமாக்ரசி ஆன் வீல் என்ற விழிப்புணர்வு வாகனம் துவக்கி வைக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us