/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நாட்டு நலப்பணி திட்டம்: ஏழு நாள் சிறப்பு முகாம்
/
நாட்டு நலப்பணி திட்டம்: ஏழு நாள் சிறப்பு முகாம்
ADDED : ஜன 01, 2026 05:48 AM

வில்லியனுார்: அரும்பார்த்தபுரம் புளூ ஸ்டார் ஆங்கில மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில், ஏழுநாள் சிறப்பு முகாம் பங்கூர் கிராமத்தில் துவங்கியது.
முகாமிற்கு பள்ளி தாளாளர் மெய்வழி ரவிக்குமார் தலைமை தாங்கினார். பள்ளி துணை முதல்வர் சாலை சிவசெல்வம், புதுச்சேரி மாநில நாட்டு நலப்பணித்திட்ட அதிகாரி சதீஷ்குமார், ஒருங்கிணைப்பாளர் கலைவாணி ஆகியோர் துவக்கி வைத்தனர்.
நிகழ்ச்சில் பங்கூர் கிராம கோவில் நிர்வாக உறுப்பினர்கள் எத்திராஜ், அர்ஜூனன், ராமசாமி மற்றும் கிராம தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து கிராமத்தில் உழவார பணிகள், மரக்கன்று நடவு செய்தல், சைபர் குற்றங்கள் தடுப்பு விழிப்புணர்வு, டெங்கு நோய் தடுப்பு, போதைப் பொருள் தடுப்பு, போக்குவரத்து விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு நலப்பணி நிகழ்ச்சிகள் செய்தனர்.
ஏழாம் நாள் நிறைவு நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் வீரமுத்து வாழ்த்துரை வழங்கினார். ஆசிரியை கலைச்செல்வி நன்றி கூறினார். ஏற்பாடுகளை பள்ளி தேசிய மாணவர்கள் படை அலுவலர் கரிகால்வளவன், ஆசிரியர்கள் ரேவந்த், உடற்கல்வி ஆசிரியர்கள் பார்த்தசாரதி, ராஜேஷ் மற்றம் அலுவலக ஊழியர் முரளிதரன் ஆகியோர் செய்தனர்.

