ADDED : டிச 10, 2025 05:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: மாநில அளவில், தேசிய இளையோர் கலை விழா மற்றும் கிராமிய பாடல் போட்டி நடந்தது.
புதுச்சேரியில் நடந்த போட்டியில், அபிேஷகப்பாக்கம் மண்வாசம் மங்கல இசை மற்றும் கலைக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த போட்டியில், இக்குழுவின் தலைவர் விஜயன், செயலாளர் கமலக்கண்ணன், பொருளாளர் சசிகுமார் ஆகியோர் தலைமையிலான கலைஞர்கள் பங்கேற்று, முதலிடம் பெற்றனர்.
பரிசு வழங்கும் விழாவில், வெற்றிப்பெற்ற கலைஞர்களுக்கு அமைச்சர் நமச்சிவாயம் சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கினார். விழாவில், பாஸ்கர் எம்.எல்.ஏ., மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். வெற்றிப்பெற்றவர்கள் தேசிய அளவில் டில்லியில் நடக்கும் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

