/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் நவ சண்டியாக விழா 24ம் தேதி துவக்கம்
/
பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் நவ சண்டியாக விழா 24ம் தேதி துவக்கம்
பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் நவ சண்டியாக விழா 24ம் தேதி துவக்கம்
பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் நவ சண்டியாக விழா 24ம் தேதி துவக்கம்
ADDED : மே 15, 2025 12:39 AM
புதுச்சேரி: பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில், மண்டலாபிேஷக பூர்த்தி, 108 கலசாபிேஷகம் மற்றும் நவ சண்டியாக பெருவிழா வரும் 24ம் தேதி துவங்குகிறது.
புதுச்சேரி - திண்டிவனம் பைபாஸ் சாலை, டோல்கேட் அருகே பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், மண்டலாபிேஷக பூர்த்தி, 108 கலசாபிேஷகம் மற்றும் நவசண்டியாக விழா வரும் 24ம் தேதி துவங்குகிறது.
இதையொட்டி, 24ம் தேதி காலை 9:00 மணிக்கு தேவதா அனுக்ஞை, சங்கல்பம், கணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், தீபாராதனை நடக்கிறது. மாலை 5:00 மணிக்கு 108 கலச ஸ்தாபனம், வேதிகார்ச்சனை, முதற்கால சண்டிகா நவாரண பூஜை, ஸப்தசதி பாராயணம், தீபாராதனை, கலச ஸ்தாபனம், மாத்ருகா பூஜை, மண்டப பூஜை, முதற்கால சண்டிகா நவாவரண பூஜை, ஸப்தசதி பாராயணம், தீபாராதனை நடக்கிறது.
வரும் 25ம் தேதி காலை 5:00 மணிக்கு இரண்டாம் கால 108 கலச பூஜை, வேதிகார்ச்சனை, திரவியாஹூதி, தீபாராதனை, இரண்டாம் கால சண்டிகா நவாரண பூஜை, சண்டி ஹோமம் ஆரம்பம், 13 ஆத்யாய ஹோமங்கள், சவுபாக்ய திரவிய சமர்ப்பணம், வஸோத்தார ஹோமம், கன்யா பூஜை, சுமங்கலி பூஜை, பிரம்மச்சாரி பூஜை, வடுக பூஜை, தீபாராதனை, யாத்ரா தானம், கலசம் புறப்பாடு, பாலா திரிபுரசுந்தரி அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கலசாபிேஷகம், தீபாராதனை நடக்கிறது.
மதியம் 1:00 மணிக்கு அன்னதானமும், இரவு 7:00 மணிக்கு விசேஷ அலங்காரம், பாலா திரிபுரசுந்தரி மற்றும் பரிவார மூர்த்திகள் கோவில் உள் புறப்பாடு நடக்கிறது.