sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 லலிதாம்பிகை கோவிலில் நவராத்திரி மகா யாகம்

/

 லலிதாம்பிகை கோவிலில் நவராத்திரி மகா யாகம்

 லலிதாம்பிகை கோவிலில் நவராத்திரி மகா யாகம்

 லலிதாம்பிகை கோவிலில் நவராத்திரி மகா யாகம்


ADDED : மார் 22, 2026 05:45 PM

Google News

ADDED : மார் 22, 2026 05:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: குருமாம்பேட் யோகமாயா லலிதாம்பிகை கோவிலில், நவராத்திரி விழாவையொட்டி, நடந்த மகா யாகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

குருமாம்பேட் பகுதியில் யோகமாயா லலிதாம்பிகை கோவில் உள்ளது. இக்கோவிலில், வளர்பிறை மற்றும் தேய்பிறை திதியில் பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. இந்நிலையில், வசந்த நவராத்திரி விழா கடந்த 19ம் தேதி துவங்கியது.

இவ்விழாவையொட்டி, சகல செல்வங்கள் பெறவும், அமைதி வேண்டியும் தினசரி மாலை 5:00 மணிக்கு சிறப்பு மகா யாகம் நடந்து வருகிறது. அதனை தொடர்ந்து, மகா அபிேஷம், சிறப்பு பூஜையுடன் தீபாராதனை நடக்கிறது.

நேற்று மாலை நடந்த மகா யாகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை தரிசனம் செய்தனர். தொடர்ந்து, சங்கீத கச்சேரி நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகி மகேஸ்வர சாஸ்திரிகள் செய்து வருகிறார். நவராத்திரி விழா, ராம நவமி தினமான வரும் 27ம் தேதியுடன் நிறைவடைகிறது.






      Dinamalar
      Follow us