/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் மன்னர் ஆட்சி நாஜிம் எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு
/
புதுச்சேரியில் மன்னர் ஆட்சி நாஜிம் எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு
புதுச்சேரியில் மன்னர் ஆட்சி நாஜிம் எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு
புதுச்சேரியில் மன்னர் ஆட்சி நாஜிம் எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு
ADDED : ஜூலை 16, 2025 01:58 AM

புதுச்சேரி : புதுச்சேரியில், மன்னர் ஆட்சி நடப்பதாக நாஜிம் எம்.எல்.ஏ., குற்றம் சாட்டினார்.
அவர், கூறியதாவது;
புதுச்சேரியில் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட ஆட்சி நடக்காமல், மன்னர் ஆட்சி நடக்கிறது. அதிகாரிகள் ஆட்சியை நடத்துகின்றனர்.
பல மாநிலங்களில் பல்வேறு திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் எம்.எல்.ஏ., நிதி மூன்று மாதங்களில் கிடைத்து விடும். ஆனால், புதுச்சேரி மாநிலத்தில் பல திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட எம்.எல்.ஏ., நிதி வழங்காமல் இருந்து வருகிறது.
தாசில்தார் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு கிடைக்காமல் காத்து கிடக்கின்றனர். காரைக்காலில் ஒரு உதவிப்பெறும் பள்ளி யில் கடந்த 4 மாதங்களாக ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்காமல் இருந்து வருகிறது.
வாரிசு அடிப்படையில், 5 சதவீதம் பணி வழங்க வேண்டும் என உள்ளது. கடந்த 2020க்கு பிறகு வாரித்தாரர்களுக்கு பணிகள் வழங்காமல் உள்ளதால் அந்த குடும்பத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மக்கள் திரண்டு, முதல்வரிடம் நின்றால் மட்டும் அதிகாரிகளின் ஆதிக்கம் குறையும்' என்றார்.

