/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கடற்கரையை மேம்படுத்த நாஜிம் எம்.எல்.ஏ., கோரிக்கை
/
கடற்கரையை மேம்படுத்த நாஜிம் எம்.எல்.ஏ., கோரிக்கை
ADDED : ஏப் 23, 2025 04:02 AM
காரைக்கால் : காரைக்கால் கடற்கரையை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாஜிம் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.
காரைக்கால் மாவட்டத்தில் சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசு பட்ஜெட்டில் ஒவ்வொரு ஆண்டும் சென்ட்ரால் ஸ்பான்சர் ஸ்கீம் என்கின்ற திட்டத்தில் நிதி ஒதுக்கப்படுகிறது. ரூ.500 கோடி ஒதுக்கீட்டை அதற்கு பின் ரூ 621 கோடி உயரத்தியது ஆனால் தற்போது ரூ.400 கோடி குறைந்துள்ளது. நிதி குறைப்புக்கு சுற்றுலாத்துறை மூலம் திட்டங்களை முறையாக செயல்படுத்தாததே காரணமாகும்.
மேலும் காரைக்கால் கடற்கரையில் மேம்படுத்த வேண்டிய அவசியம் குறித்து முதல்வர், சுற்றுலா அமைச்சர் மற்றும் துறை அதிகாரிகளுடன் பேசியதால் அரசு ரூ. 20 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதற்கான பணி தொடங்கவில்லை. மேலும் அரசு சுற்றுலா திட்டங்கள் குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. காரைக்கால் கடற்கரையை மேம்படுத்தும் திட்டப் பணிக்கு இதுவரை டெண்டர் விடவில்லை. இது குறித்து கவர்னர். முதல்வர் ஆகியோருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசு காரைக்கால் கடற்கரையை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாஜிம் எம்.எல்.ஏ .,தெரிவித்தார்.

