/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் தே.ஜ., கூட்டணி . உறுதியானது .. ஒரு வார இழுபறிக்கு முற்றுப்புள்ளி
/
புதுச்சேரியில் தே.ஜ., கூட்டணி . உறுதியானது .. ஒரு வார இழுபறிக்கு முற்றுப்புள்ளி
புதுச்சேரியில் தே.ஜ., கூட்டணி . உறுதியானது .. ஒரு வார இழுபறிக்கு முற்றுப்புள்ளி
புதுச்சேரியில் தே.ஜ., கூட்டணி . உறுதியானது .. ஒரு வார இழுபறிக்கு முற்றுப்புள்ளி
ADDED : மார் 21, 2026 05:17 AM

புதுச்சேரி: புதுச்சேரி தே.ஜ., கூட்டணியில் ல.ஜ.க., வை சேர்த்துக் கொள்ள முதல்வர் ரங்கசாமி ஏற்றுக் கொண்டதை தொடர்ந்து, கடந்த ஒரு வாரமாக நிலவி வந்த இழுபறிக்கு நேற்று மாலை முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
புதுச்சேரி சட்டசபை தேர்தலை கடந்த தேர்தலை போல் என்.ஆர்.காங்., - பா.ஜ., - அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் உள்ளடங்கிய தே.ஜ., கூட்டணியா க சந்திக்க முடிவான நிலையில், தொழிலதிபர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் துவங்கிய லட்சிய ஜனநாயக கட்சியை கூட்டணியில் சேர்க்க பா.ஜ., முடிவு செய்தது.
அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த முதல்வர் ரங்கசாமி, கூட்டணியில் ல.ஜ,க.,வை சேர்த்தால், கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேறுவதாக கூறினார். மு தல்வரின் நிபந்தனை குறி த்து கடந்த 18ம் தேதி ஆலோசனை நடத்திய தேசிய தலைமை, முதல்வரை சமாதானப்படுத்த, புதுச்சேரிக்கு மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை நேற்று முன்தினம் அனுப்பி வைத்தது.
ஆனால், அன்று காலை 11:30 மணிக்கு முதல்வர் ரங்கசாமி திடீரென திருச்செந்துார் கோவிலுக்கு புறப்பட்டு சென்றார். 'அப்செட்' ஆன மத்திய அமைச்சர், மன்சுக் மாண்டவியா, தனியார் ஓட்டலில் பா.ஜ.,வினருடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து முதல்வரின் டில்லி பிரதிநிதியான மல்லாடி கிருஷ்ணாராவ், திருச்செந்துார் சென்ற முதல்வர் ரங்கசாமியை போனில் தொடர்பு கொண்டு, பா.ஜ.,வினர் பேச்சவார்த்தைக்கு வந்துள்ள தகவலை தெரிவித்தார்.
அமித்ஷா சமரசம் புதுச்சேரி ஓட்டலில் தங்கியிருந்த மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை, என்.ஆர்.காங்., கட்சியை சேர்ந்த அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமையிலான ஐவர் குழுவினர் சந்தித்து பேசினர். அதே நேரத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதல்வர் ரங்கசாமியை போனில் தொடர்பு கொண்டு, கூட்டணியில் சேர்த்து கொள்வதாக ல.ஜ.க.,வின் தலைவர் ஜோஸ்சார்லஸ் மார்ட்டினிடம் வாக்குறுதி கொடுத்துவிட்டோம். அவருடன் எங்களுக்கு மேலும் சில 'டீலிங்' உள்ளது. அவரை, கூட்டணியில் சேர்ப்பதை எதிர்க்க வேண்டாம். அவரால் எந்த சிக்கலும் வாரமல் பார்த்துக் கொள்கிறோம் என்றார்.
முதல்வர் நிபந்தனை அதனையேற்ற முதல்வர் ரங்கசாமி, நீங்கள் சொல்வதா ல் ல.ஜ.க.,வை கூட்டணியில் சேர்க்க ஒப்புக் கொள்கிறோம். ஆனால், சில நிபந்தனைகளை ஏற்க வேண்டும் என்றார். அதற்கு அமித்ஷா 'ஒ.கே.,' தெரிவித்ததை தொடர்ந்து, நேற்ற மதியம், ஒரு மணிக்கு, அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமையிலான ஐவர் குழுவினர், புதுச்சேரி ஓட்டலில் தங்கியிருந்த மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா வை சந்தித்து, முதல்வரின் நிபந்தனைகளை தெரிவித்தனர்.
கண்டிஷன் அதில், கூட்டணியில் ல.ஜ.க.,வை சேர்க்கலாம். ஆனால், அவர் அமைச்சரவையில் இடம் பெறக்கூடாது. மூன்று நியமன எம்.எல்.ஏ.,க்களில் ஒரு எம்.எல்.ஏ., மற்றும் ராஜ்யசபா எம்.பி., பதவி என்.ஆர்.காங்., கட்சிக்கு வழங்க வேண்டும். கடந்த தேர்தலில் என்.ஆர்.காங்., போட்டியிட்ட 16 தொகுதிகளில், மாகியை தவிர்த்து அனைத்து தொகுதிகளும் எங்களுக்கு வழங்க வேண்டும். மாகிக்கு பதிலாக, லாஸ்பேட்டை தொகுதி வழங்க வேண்டும்.
சந்திப்பு அதனைத் தொடர்ந்து மதியம் 2:30 மணிக்கு ஓட்டலுக்கு வந்த முதல்வர் ரங்கசாமி, மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை சந்தித்து பேசினர். பின்னர் வெளியே வந்த இருவரும், எதிர்வரும் சட்டசபை தேர்தலை தே.ஜ., கூட்டணி ஒற்றுமையுடன் சந்திக்க உள்ளது என்றனர். இதன் மூலம், தே.ஜ., கூட்டணியில் கடந்த ஒரு வாரமாக நிலவி வந்த இழுபறி முடிவுக்கு வந்துள்ளது.

