/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் பேனர்களை அகற்றுவதில் அலட்சியம் அதிகாரிகள் யாரை பார்த்து பயப்படுகின்றனர்?
/
புதுச்சேரியில் பேனர்களை அகற்றுவதில் அலட்சியம் அதிகாரிகள் யாரை பார்த்து பயப்படுகின்றனர்?
புதுச்சேரியில் பேனர்களை அகற்றுவதில் அலட்சியம் அதிகாரிகள் யாரை பார்த்து பயப்படுகின்றனர்?
புதுச்சேரியில் பேனர்களை அகற்றுவதில் அலட்சியம் அதிகாரிகள் யாரை பார்த்து பயப்படுகின்றனர்?
ADDED : பிப் 11, 2024 02:19 AM

புதுச்சேரி: நீதிமன்றம் தலையிட்ட பிறகும், புதுச்சேரியில் பேனர்களை அகற்றுவதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
புதுச்சேரியின் சாலைகள், முக்கிய சந்திப்புகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள், ேஹார்ட்டிங்ஸ், அலங்கார வளைவுகள், கட் அவுட்கள், தட்டிகள் வைக்கப்பட்டுள்ளது உயர்நீதிமன்ற உத்தரவை மீறு செயல் என்றும், பேனர்கள் உள்ளிட்ட அனைத்தையும் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புதுச்சேரி தலைமை நீதிபதி சந்திரமோகன், புதுச்சேரி கலெக்டருக்கு, கடந்த 2ம் தேதி கடிதத்தை அனுப்பி இருந்தார்.
பேனர் விவகாரத்தில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க, உயர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் எனவும் தலைமை நீதிபதி எச்சரித்து இருந்தார்.
இந்த கடிதத்தின் நகல், தலைமைச் செயலர், டி.ஜி.பி., பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர், போக்குவரத்து சீனியர் எஸ்.பி., நகராட்சிகள் மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளின் ஆணையர்களுக்கும் அனுப்பப்பட்டது.
இந்த செய்தி பத்திரிக்கைகளில் வெளியானவுடன், விரல் விட்டு எண்ணக்கூடிய ஓரிரு தனி நபர்கள் மட்டும் தாங்கள் வைத்திருந்த பேனர்களை இரவோடு இரவாக அகற்றினர். ஆனால், பெரும்பாலானவர்கள் பேனர்களை அகற்ற முன்வரவில்லை.
சட்ட விரோதமாக வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கையில் இறங்கவில்லை.
புதுச்சேரி தலைமை நீதிபதி எச்சரித்தும், நகரம், கிராமம் என அனைத்து இடங்களிலும் பேனர்கள் அகற்றப்படாமலேயே உள்ளது.
எங்கே சென்றாலும், அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள மளிகைக்கடை பேனர்களில் ஆரம்பித்து, அரசியல்கட்சியினரின் மெகா பேனர்கள் வரை பேனர்மயமாக காட்சியளிக்கிறது.
அனைத்து மின் கம்பங்களிலும் பேனர்கள் காற்றில் ஊசலாடி கொண்டுள்ளன. 'எப்போது விழுமோ, யார் மீது விழுமோ' என்ற நிலையில் உள்ள பேனர்களை பார்த்து பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர்.
நீதிமன்றத்தின் உத்தரவுபடி பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டிய போலீசாரும், உள்ளாட்சித் துறையினரும் ''கை கட்டி... வாய் பொத்தி... மவுனமாக...'' வேடிக்கை பார்த்து கொண்டுள்ளனர்.
உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பிறகும், பேனர்களை அகற்றுவதற்கு அதிகாரிகளுக்கு தைரியம் இல்லையா? சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் யாரை பார்த்து பயப்படுகின்றனர்?
'அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும்'
புதுச்சேரி முன்னாள் அரசு வழக்கறிஞர் பிரவீன்குமார் கூறியதாவது:
''தமிழகம், புதுச்சேரியில் பேனர்கள் வைப்பது தொடர்பாக உயர்நீதிமன்றம் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
ஆனால், புதுச்சேரியில் இந்த பேனர் தடை உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை.
அரசியல்வாதிகளில் கைப்பாவையாக மாறி அதிகாரிகள் கண்டும் காணாமல் உள்ளனர். இதனால் தான் புற்றீசல் போல் பேனர்கள் சாலைகளில் வைக்கப்படுகின்றன.
பேனர்களால் நகரின் அழகு கெடுவதோடு, பொதுமக்களுக்கு தொல்லையாகவும், இடையூறாகவும் உள்ளது. இது, ஒரு சாபக்கேடாகவே மாறிவிட்டது.
அப்படியே பேனர்களை அகற்றினாலும், ஒப்புக்கு சில நாட்கள் அகற்றிவிட்டு மவுனமாகி விடுகின்றனர்.
பேனரை அகற்ற வேண்டிய முழு பொறுப்பு மாவட்ட நிர்வாகத்தை வைத்திருக்கும் கலெக்டரையே சாரும். இதனால், இப்போது உயர்நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி, பேனர் தடையை அமல்படுத்த வேண்டிய மாவட்ட கலெக்டருக்கு நினைவூட்டல் போன்று புதுச்சேரி தலைமை நீதிபதி எச்சரிக்கை சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
இதற்கு பின்பும் புதுச்சேரியில் பேனர் வைப்பதை முற்றிலும் தடுக்காவிட்டால், அரசு அதிகாரிகளுக்கு சிக்கல் தான் ஏற்படும். சென்னை உயர்நீதிமன்றமே நேரடியாக தலையிடும்.
கோர்ட் உத்தரவை அமல்படுத்தாத மாவட்ட கலெக்டர், தலைமைச் செயலர், டி.ஜி.பி., பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர், போக்குவரத்து சீனியர் எஸ்.பி., நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மீது தானாக முன் வந்து அவமதிப்பு வழக்கை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுக்க நேரிடும்.
இல்லையெனில், யாராவது பொதுநலன் வழக்கு தொடர்ந்தாலும், கலெக்டர் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு பதியப்படும்.
இனிமேலும், பேனர் தடை விஷயத்தில் எனவே, அதிகாரிகள் இனியும் அலட்சியம் காட்டினால், கோர்ட் அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும்.
உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பிறகும், பேனர்களை அகற்றுவதற்கு அதிகாரிகளுக்கு தைரியம் இல்லையா? சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் யாரை பார்த்து பயப்படுகின்றனர்?
நீதிமன்றத்தின் உத்தரவுபடி பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டிய போலீசாரும், உள்ளாட்சித் துறையினரும் ''கை கட்டி... வாய் பொத்தி... மவுனமாக...'' வேடிக்கை பார்த்து கொண்டுள்ளனர்.