தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தொகுதியை 8 ஆண்டுகளாக எட்டிப்பார்க்காதவர் என்.ஆர்.காங்., வேட்பாளர் மீது நேரு குற்றச்சாட்டு

தொகுதியை 8 ஆண்டுகளாக எட்டிப்பார்க்காதவர் என்.ஆர்.காங்., வேட்பாளர் மீது நேரு குற்றச்சாட்டு

தொகுதியை 8 ஆண்டுகளாக எட்டிப்பார்க்காதவர் என்.ஆர்.காங்., வேட்பாளர் மீது நேரு குற்றச்சாட்டு


ADDED : செப் 25, 2026 07:44 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2026 07:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதியை 8 ஆண்டுகளாக எட்டிப்பார்க்காதவர் என்.ஆர்.காங்., வேட்பாளர் என, நேரு எம்.எல்.ஏ., குற்றம்சாட்டியுள்ளார்.

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்., வேட்பாளர் விநாயகத்தை ஆதரித்து, நேயம் மக்கள் கழக தலைவர் நேரு எம்.எல்.ஏ., நேற்று காலை மோகன் நகர், ஸ்டேட் பாங்க் காலனி, வி.வி.பி., நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வீடுவீடாக சென்று ஓட்டு சேகரித்தார்.

அவர், பேசியதாவது: இந்த இடைத்தேர்தலில், என்.ஆர்.காங்., சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் கடந்த காலங்களில் ஊழல் குற்றவாளி என நீதிமன்ற தீர்ப்பு மூலம் எம்.எல்.ஏ., பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அன்று போனவர் தான், தொகுதி பக்கமே எட்டி பார்க்கவில்லை. அப்போது நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க., எம்.எல்.ஏ.,வும் தொகுதி பக்கமே எட்டி பார்க்காமல் போனார்.

கடந்த 2021 பொதுதேர்தலில் வெற்றி பெற்ற முதல்வர் ரங்கசாமி வெற்றி பெற்ற பிறகு நன்றி கூட சொல்லவில்லை. கடந்த 2026 தேர்தலிலும் வெற்றி பெற்ற முதல்வர் திடீரென தட்டாஞ்சாவடி தொகுதியை ராஜினாமா செய்ததால் தற்போது இடைத்தேர்தல் வந்துள்ளது.

என்.ஆர்.காங்., வேட்பாளர் சென்னை உயர்நீதிமற்றத்தில், அவரது குற்றம் சி.பி.ஐ.,யால் நிருபிக்கப்படவில்லை தீர்ப்பு வெளியாகி, தற்போது போட்டியிடுகிறார். கடந்த எட்டு ஆண்டுகளாக எட்டிப்பார்க்காதவர், தற்போது தொகுதி மக்களுக்கு உயிரையும் கொடுப்பேன் என்கிறார். 

ஆனால் இவரது கல்வி நிறுவனங்களில், தட்டாஞ்சாவடி தொகுதியை சேர்ந்த ஏழை பிள்ளைகளுக்கு எத்தனை பேருக்கு இலவச கல்வி வழங்கி உள்ளார். தேர்தல் முடிந்த பின் இவரையும் பார்க்க முடியாது. பழைய நிலைதான் நீடிக்கும். 

மக்களுக்காக உழைக்ககூடிய மக்கள் சேவகர் வேண்டுமா. குடிநீர் பிரச்னை மின் தடை என்றாலோ கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரும் விநாயகத்திற்கு கை சின்னத்தில் ஓட்டளித்து பெருவாரியான ஓட்டு வித்யாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us