தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ உருளையன்பேட்டை தொகுதியில் நேரு எம்.எல்.ஏ., ஓட்டு சேகரிப்பு

 உருளையன்பேட்டை தொகுதியில் நேரு எம்.எல்.ஏ., ஓட்டு சேகரிப்பு

 உருளையன்பேட்டை தொகுதியில் நேரு எம்.எல்.ஏ., ஓட்டு சேகரிப்பு


ADDED : மார் 29, 2026 04:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 29, 2026 04:08 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: த.வெ.க., தலைவர் விஜய் ஆதரவுடன், உருளையன்பேட்டை தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் நேயம் மக்கள் கழக தலைவர் நேரு எம்.எல்.ஏ., குக்கர் சின்னத்திற்கு தீவிர ஓட்டு சேகரித்து வருகிறார்.

ராஜா நகர், முத்தமிழ் நகர், அருந்ததி நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் குக்கர் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.

அப்போது நேயம் மக்கள் கழக பிரமுகர்கள், நிர்வாகிகள், பலர் கலந்து கொண்டனர்.

வேட்பாளர் நேரு கூறுகையில், 'ராஜாநகர் பகுதி முழுவதும் புதிய சிமென்ட் சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளது. ராஜா நகர், முத்தமிழ் நகர் அருந்ததி நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதி மக்கள் பயன்பெறும் வகையில், ராஜா நகர் பகுதியில் சமுதாய நலக்கூடம், ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்தது மக்களுக்கு பயனுள்ளதாக உள்ளது.

ராஜா நகர் பகுதி உருவான காலங்களில் இருந்து இத்தனை ஆண்டுகளாக கோவில் இல்லாத நிலையை மாற்றி, புதிதாக ராஜகாளியம்மன் கோவில் திருப்பணிகள் ஆரம்பித்து கட்டி முடிக்கப்பட்டு கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.

அருந்ததிபுரம் பகுதியில் முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது எனக் கூறி, அப்பகுதி மக்களிடம் வேட்பாளர் நேரு ஓட்டு சேகரித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us