/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உப்பனாறு மேம்பாட்டு பணி நேரு எம்.எல்.ஏ., ஆய்வு
/
உப்பனாறு மேம்பாட்டு பணி நேரு எம்.எல்.ஏ., ஆய்வு
ADDED : ஜூலை 25, 2025 02:36 AM

புதுச்சேரி: உப்பனாறு வாய்க்கால் சாலை அமைக்கும் பணியை நேரு எம்.எல்.ஏ., நேரில் ஆய்வு செய்தார்.
உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட மறைமலை அடிகள் சாலை, காமராஜர் சாலை இடைப்பட்ட உப்பனாறு வாய்க்கால் மேல் சாலை அமைக்கும் பணிகள் கடந்த ஏழு ஆண்டுகளாக தடைபட்டிருந்தது. தற்போது பணிகள் துவங்கி நடந்து வருகிறது. இப்பணிகளை நேரு எம்.எல்.ஏ., ஆய்வு மேற்கொண்டார்.
உப்பனாறு வாய்க்கால் சாலை அமைக்கும் பணி நீண்ட முயற்சிக்குப் பின் துவங்கப்பட்டுள்ளது. இப்பணிகள் விரைந்து முடிக்க வேண்டும். உப்பனாறு வாய்க்காலை சுற்றியுள்ள பகுதிகளில் மழை காலங்களில் தண்ணீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கு வேண்டும் என, அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.
ஆய்வின்போது, புதுச்சேரி பொதுப்பணித்துறை கட்டடங்கள் மற்றும் சாலைகள் மத்திய பிரிவு செயற்பொறியாளர் சீனிவாசன், நீர்பாசன கோட்ட செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் உடனிருந்தனர்.