தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/உப்பனாறு அடைப்பை சரி செய்யாவிட்டால் போராட்டம்: நேரு எம்.எல்.ஏ., எச்சரிக்கை

உப்பனாறு அடைப்பை சரி செய்யாவிட்டால் போராட்டம்: நேரு எம்.எல்.ஏ., எச்சரிக்கை

உப்பனாறு அடைப்பை சரி செய்யாவிட்டால் போராட்டம்: நேரு எம்.எல்.ஏ., எச்சரிக்கை


UPDATED : அக் 25, 2026 05:26 PM

ADDED : அக் 25, 2026 05:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 25, 2026 05:26 PM ADDED : அக் 25, 2026 05:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கனமழை காரணமாக உப்பனாறு வாய்க்காலில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை உடனே சரிசெய்யாவிட்டால் பொதுமக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும் என, நேரு எம்.எல்.ஏ., எச்சரித்துள்ளார்.

புதுச்சேரியில் பெய்து வரும் கனமழை காரணமாக உப்பனாறு வாய்க்காலில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வாய்க்காலில் ஏற்பட்டுள்ள அடைப்புகள் காரணமாக மழைநீர் வெளியேற முடியாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது.

இதன் காரணமாக உருளையன்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட சாந்தி நகர், இளங்கோ நகர், சாரதி நகர், கென்னடி நகர், திடீர் நகர், கோவிந்தசாலை, புதுநகர், குபேர் நகர், வாஞ்சிநாதன் வீதி, சுப்பிரமணிய சிவா வீதி, காமராஜர் வீதி, அந்தோணியார் கோவில் வீதி, பாரதிதாசன் வீதி, சகாய மாதா பாடசாலை வீதி, நேரு நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீர் வடியாமல் தேங்கியுள்ளது. குடியிருப்புகளுக்குள் வெள்ள நீர் புகுந்து மக்களின் உடைமைகள் சேதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளையும் உப்பனாறு வாய்க்காலையும் தொகுதி எம்.எல்.ஏ., நேரு ஆய்வு செய்தார்.

பின், அவர், கூறுகையில், ‘உப்பனாறு வாய்க்காலின் மேல் சாலை அமைக்கும் பணியை விரைந்து முடித்தால் மட்டுமே இதற்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும். தற்போது சாலை அமைக்க கொட்டப்பட்ட கற்களும் மணலும் வாய்க்காலில் 4 அடி உயரத்திற்கு குவிந்து கிடக்கிறது. இதனால் மழைநீர் செல்லமுடியவில்லை.

மணலையும் கற்களையும் தூர்வாரி அப்புறப்படுத்தினாலே மழைநீர் எளிதாக கடலில் கலந்துவிடும். இந்தச் சிக்கலுக்கு விரைவில் அரசு தீர்வு காண வேண்டும். தவறும்பட்சத்தில், பொதுமக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்தப்படும்’ என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us