ADDED : அக் 25, 2026 05:26 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: நைனார்மண்டபம் தென்னஞ்சாலை பகுதியில் சாலையில் தேங்கிய மழைநீரை முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் பார்வையிட்டு, மழைநீர் வெளியேற நடவடிக்கை மேற்கொண்டார்.
புதுச்சேரியில் நேற்று (அக்.,24) இரவு முதல் தொடர் கனமழை பெய்தது. இதனால், முதலியார்பேட்டை தொகுதிக்குட்பட்ட கடலுார் சாலை, நைனார்மண்டபம் தென்னஞ்சாலை முதல் சுதானா நகர் வரை மழைநீர் தேங்கி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
தகவலறிந்த முன்னாள் எம்.எல்.ஏ.,வும், பா.ஜ., மாநில துணை தலைவருமான பாஸ்கர் சம்பவ இடத்திற்கு விரைந்து, மழைநீர் தேங்கிய பகுதிகளை பார்வையிட்டு, அதனை உடனடியாக வெளியேற அதிகாரிகள் மூலம் நடவடிக்கை மேற்கொண்டார்.
