/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நெல்லித்தோப்பு ல.ஜ.க., வேட்பாளர் கஸ்துாரிபாய் நகரில் ஓட்டு சேகரிப்பு
நெல்லித்தோப்பு ல.ஜ.க., வேட்பாளர் கஸ்துாரிபாய் நகரில் ஓட்டு சேகரிப்பு
நெல்லித்தோப்பு ல.ஜ.க., வேட்பாளர் கஸ்துாரிபாய் நகரில் ஓட்டு சேகரிப்பு
ADDED : மார் 30, 2026 06:45 PM

அ நிறம் | அளவு
வில்லியனுார்:நெல்லித்தோப்பு தொகுதியில் தே.ஜ., கூட்டணியில் ல.ஜ.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளராக ஜெயக்குமார் நேற்று வீடு, வீடாக சென்று தர்பூசணி சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.
வேட்பாளருடன் ல.ஜ.க., தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் உடன் சென்று ஆதரவு திரட்டினார். பிரசாரத்திற்கு சென்ற வேட்பாளரை பல இடங்களில் பட்டாசு வெடித்து அவரது ஆதரவாளர்கள் வரவேற்றனர்.
நேற்று காலை கஸ்துாரிபாய் நகரில் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து தர்பூசணி சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார். அப்போது, பொதுமக்கள் கூறிய குறைகளை கேட்டு ,தேர்தலில் வெற்றி பெற்றதும் அனைத்து குறைகளையம் நிறைவேற்றி கொடுப்பதாக உறுதி அளித்தார்.
பிரசாரத்தில் வேட்பாளருடன், என்.ஆர்.காங்., அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்
