/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காதல் ஜோடியை மிரட்டிய போலீஸ்காரருக்கு வலை
/
காதல் ஜோடியை மிரட்டிய போலீஸ்காரருக்கு வலை
ADDED : செப் 27, 2024 05:01 AM
காரைக்கால்: காதல்ஜோடியை மிரட்டி, பணம் பறித்த சம்பவத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட கடலோர காவல்படை போலீஸ்காரர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
காரைக்கால் கடற்கரையில், கடந்த 19ம் தேதி கடலோர காவல் படை போலீஸ்காரர் ராஜ்குமார் ரோந்து சென்றார். அப்போது, அங்கிருந்த காதல் ஜோடியை அழைத்து மிரட்டி, மானபங்கப்படுத்தி, பணம் கேட்டு மிரட்டினார்.
இச்சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இதையடுத்து போலீஸ் ராஜகுமாரை காரைக்கால் சீனியர் எஸ்.பி., மனிஷ் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இந்நிலையில், இச்சம்பவம் குறித்த புகாரின் பேரில் காரைக்கால் போலீசார் மானப்பங்கப்படுத்தல் மற்றும் பணம் பறித்தல் பிரிவுகளில் வழக்கு பதிந்து ராஜ்குமாரை தேடிவருகின்றனர்.

