/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதிய பஸ் நிலையம்: எம்.எல்.ஏ., ஆய்வு
/
புதிய பஸ் நிலையம்: எம்.எல்.ஏ., ஆய்வு
ADDED : ஜன 21, 2025 06:42 AM

பாகூர்: பாகூரில் வட்டாச்சியர் அலுவலகம், சார் பதிவாளர் அலுவலகம், காவல் நிலையம், கொம்யூன் பஞ்சாயத்து, மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு அரசு துறை அலுவலங்கள் இயங்கி வருகிறது.
பாகூரில் பொது மக்களின் நலன் கருதி, பஸ் ஸ்டேண்ட் அமைக்க திட்டமிடப்பட்டு, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பணிகள் துவங்கியது. தற்போது, பஸ் நிலைய கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.
இந்நிலையில், பஸ் நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வருவது தொடர்பாக, செந்தில்குமார் எம்.எல்.ஏ., நேற்று பொதுப்பணித்துறை சாலை மற்றும் சிறப்பு கட்டடம் பிரிவு செயற் பொறியாளர் சந்திரகுமார் மற்றும் துறை அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, பஸ் நிலையத்தில் உள்ள வசதிகள் மற்றும் கூடுதலாக என்ன செய்யலாம் என்பது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
மேலும் பாகூரில் அமைக்கப்பட்டுள்ள உள் விளையாட்டு அரங்கத்தை விரைந்து பயன்பாட்டிற்கு கொண்டு வருவது தொடர்பாக அவர் ஆய்வு செய்தார்.
பொதுப்பணித்துறை சிறப்பு கட்டடம் உதவி பொறியாளர் விக்டோரியா, இளநிலை பொறியாளர் ஜெயமாறன்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

