/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உப்பளம் மைதானத்தில் 'ஹாமர் த்ரோ' பயிற்சிக்கு புதிய கூண்டு அமைப்பு
/
உப்பளம் மைதானத்தில் 'ஹாமர் த்ரோ' பயிற்சிக்கு புதிய கூண்டு அமைப்பு
உப்பளம் மைதானத்தில் 'ஹாமர் த்ரோ' பயிற்சிக்கு புதிய கூண்டு அமைப்பு
உப்பளம் மைதானத்தில் 'ஹாமர் த்ரோ' பயிற்சிக்கு புதிய கூண்டு அமைப்பு
ADDED : அக் 03, 2024 05:01 AM

புதுச்சேரி : உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில், 'சம்மட்டி எறிதல்' தடகள விளையாட்டிற்கான கூண்டு அமைக்கும் பணி நடக்கிறது.
உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் தடகள விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெற கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் ரூ. 7 கோடி மதிப்பில், 400 மீட்டர் ஓடுபாதை சிந்தடிக் பாதை மற்றும் புல் தரையுடன் கூடிய கால்பந்து மைதானம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இங்கு நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஹாக்கி, வாலிபால், கூடைப்பந்து, கபடி மைதானங்களும் உள்ளது. ஒலிம்பிக் போட்டியில் இடம்பெற்றுள்ள தடகள விளையாட்டான 'ஹாமர் த்ரோ' போட்டிக்கு பயிற்சி பெறவும், போட்டிகள் நடத்த கூண்டு போன்ற அமைப்பு பொருத்தும் பணி நடந்து வருகிறது.
'ஹாமர் த்ரோ' என்பது, கை பிடியுடன் 121.5 செ.மீ., நீள கம்பியில் இணைக்கப்பட்ட 7.26 கிலோ இரும்பு பந்தை, போட்டியாளர்கள் தலைக்கு மேல் 4 முறை வட்டமாக சுழற்றி, இறுதியில் சரியான கோணத்தில் பந்தை விடுவர். அதிக துாரம் வீசும் போட்டியாளர் வெற்றி பெறுவர்.
இந்த போட்டிக்கு பயிற்சி பெற தற்போது 2 பாதுகாப்பு கூண்டுகள் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

