ADDED : பிப் 13, 2024 05:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி கலெக்டராக குலோத்துங்கன் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதுச்சேரி கலெக்டராக பதவி வகித்த வல்லவன் கோவாவுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக, காரைக்கால் கலெக்டர் குலோத்துங்கன் புதுச்சேரி கலெக்டராக மாற்றப்பட்டார்.
இந்நிலையில், புதுச்சேரி கலெக்டராக குலோத்துங்கன் பேட்டையான்சத்திரத் தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். பின், முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பூங்கொத்து அளித்து வாழ்த்து பெற்றார்.
புதிய கலெக்டரை, கலெக்டர் அலுவலக அதிகாரிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.