/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதிய கல்வி கொள்கை திட்டம் அவசரகதியில் அமல்; எதிர்க்கட்சி தலைவர் சிவா குற்றச்சாட்டு

ADDED : ஏப் 07, 2025 06:18 AM
புதுச்சேரி; மாணவர்களின் எதிர்காலத்தை பாழடிக்கும் சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சிவா வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை:
அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தின் மூலம் பயிலும் 9ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவர்கள் பெரும்பான்மையானோர் தேர்வில் தோல்வி அடைந்தததால், வரும் 10ம் தேதி முதல் மறு தேர்வு நடத்த கல்வித்துறை அட்டவணை வெளியிட்டுள்ளது.
இது சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் தோல்வி அடைந்துள்ளதை புதுச்சேரி அரசு ஒப்புக் கொண்டதாக தெரிகிறது. பாதிக்கு மேற்பட்ட மாணவர்கள் 9ம் வகுப்பு, பிளஸ் 1 தேர்வுகளில் தேர்ச்சி பெறவில்லை. கல்வித்துறை தேர்வில் தோல்வி அடைந்தவர்களின் எண்ணிக்கையை வெளியிட வேண்டும். தோல்விக்கான காரணத்தை ஆய்வு செய்து, அதனைக் களைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன் மறுத்தேர்வு நடத்துவதற்கான கால அவகாசம் அளிக்க வேண்டும்.
அதைவிடுத்து அவசரகதியில் தேர்வை நடத்தி மதிப்பெண்களை வாரி, வழங்கி கணக்கு காட்டினால் வரும் ஆண்டில் 10 வது மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர்.
அவசரகதியில் மத்திய அரசின் புதிய கல்வித் திட்டத்தை நுழைத்து மாணவர்களின் எதிர்காலத்தை பாழடிக்கும் செயலை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.