/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கூட்டுறவு கடன் சங்கத்தின் புதிய நிர்வாகக்குழு பதவியேற்பு
/
கூட்டுறவு கடன் சங்கத்தின் புதிய நிர்வாகக்குழு பதவியேற்பு
கூட்டுறவு கடன் சங்கத்தின் புதிய நிர்வாகக்குழு பதவியேற்பு
கூட்டுறவு கடன் சங்கத்தின் புதிய நிர்வாகக்குழு பதவியேற்பு
ADDED : மே 24, 2025 03:17 AM

திருக்கனுார்: கூனிச்சம்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் புதிய நிர்வாகக்குழுவினர் அமைச்சர் நமச்சிவாயம் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர்.
மண்ணாடிப்பட்டு தொகுதி, கூனிச்சம்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பதவிக்காலம் கடந்த மாதம் முடிவடைந்தது. இதையடுத்து, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு, தலைவர் மற்றும் 2 இயக்குனர்கள் அடங்கிய நிர்வாகக்குழு அமைக்கப்பட்டது. நிர்வாகக்குழு தலைவராக அன்பழகன் மற்றும் இயக்குனர்களாக தியாகராஜன், சுதாகர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு, பதவியேற்பு விழா நடந்தது. புதிய நிர்வாகக்குழுவினர் அமைச்சர் நமச்சிவாயம் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர்.
மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன், முக்கிய பிரமுகர்கள் ஞானசேகரன், பாலகிருஷ்ணன், நடராஜன், கலியபெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் விஜயராகவன் நன்றி கூறினார்.