/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பில்டர்ஸ் அசோசியேஷன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
/
பில்டர்ஸ் அசோசியேஷன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
ADDED : ஜூன் 08, 2025 04:06 AM

புதுச்சேரி: பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா புதுச்சேரி மையத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்று கொண்டனர்.
பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா புதுச்சேரி மையத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். அதன்படி, நடப்பு 2025- -2026ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.
புதுச்சேரியில் உள்ள ஹோட்டல் செண்பகா கன்வென்ஷன் சென்டரில் நடந்த விழாவில், முதல்வர் ரங்கசாமி முன்னிலையில், புதிய சேர்மனாக வேல்முருகன், செயலாளராக அசோகன், பொருளாளராக கங்காதரன் மற்றும் நிர்வாகிகள் பதவியேற்று கொண்டனர்.
விழாவில், பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியாவின் துணைத் தலைவர் (மண்டலம் -3) ரகுநாதன், அமைப்பின் தமிழகம், புதுச்சேரி மற்றும் அந்தமான் மாநில தலைவர் வெங்கடேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் வீரசெல்வம், கண்காணிப்பு பொறியாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் புதிய நிர்வாகிகளின் பணி சிறக்க வாழ்த்தி பேசினர்.
விழாவில், மாநில செயலாளர் அருணகிரி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக, மூன்று பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு, குறைதீர்வு குழு, தொழில்நுட்ப குழு, பொது சேவைக்குழு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.