/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உழவர்கரை தொகுதியில் புதிய நுாலகம்
/
உழவர்கரை தொகுதியில் புதிய நுாலகம்
ADDED : ஏப் 16, 2025 06:34 AM

புதுச்சேரி :உழவர்கரை தொகுதியில் புதிய நுாலகத்தை என்.ஆர். காங்., பிரமுகர் டாக்டர் நாராயணசாமி கேசவன் அமைத்து கொடுத்துள்ளார்.
உழவர்கரை தொகுதிக்குட்பட்ட மூலக்குளம் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் ஒருங்கிணைப்பில் அம்பேத்கரின் 134ம் ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு அம்பேத்கரின் திருவுருவச் சிலைக்கு உழவர்கரை தொகுதி என்.ஆர். காங்., பிரமுகர் டாக்டர் நாராயணசாமி கேசவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, அப்பகுதி மக்கள் மற்றும் மாணவர்கள், இளைஞர்கள் என அனைவருக்கும் பயன்படும் வகையில் புதிய நூலகத்தை தனது சொந்த செலவில் அமைத்து தந்து திறந்து வைத்தார்.
இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அசிஸ்டண்ட், வி.ஏ.ஓ., துணை தாசில்தார், போலீஸ் கான்ஸ்டபிள், யு.டி.சி., எல்.டி.சி., உள்ளிட்ட அரசு பணியாளர் தேர்வுக்கான சிறப்பு திறனறிவு புத்தகங்களையும் வழங்கினார்.
மேலும், வங்கி தேர்வுகள், டி.என்.பி.எஸ்.சி., குருப் 1,2,3,4, தேர்வு, யு.பி.எஸ்.சி., தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கான புத்தகங்களையும் நாராயணசாமி கேசவன் வழங்கினார். நிகழ்ச்சியில், உழவர்கரை, மூலக்குளம் பகுதிகளை சேர்ந்த ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

