/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதிய அமைச்சர், நியமன எம்.எல்.ஏ.,க்கள் இன்று மதியம் பதவியேற்பு
/
புதிய அமைச்சர், நியமன எம்.எல்.ஏ.,க்கள் இன்று மதியம் பதவியேற்பு
புதிய அமைச்சர், நியமன எம்.எல்.ஏ.,க்கள் இன்று மதியம் பதவியேற்பு
புதிய அமைச்சர், நியமன எம்.எல்.ஏ.,க்கள் இன்று மதியம் பதவியேற்பு
ADDED : ஜூலை 14, 2025 03:47 AM

புதுச்சேரி : புதுச்சேரி புதிய அமைச்சர் மற்றும் நியமன எம்.எல்.ஏ.,க்கள் இன்று மதியம் பதவியேற்கின்றனர்.
புதுச்சேரி என்.ஆர்.காங்., கூட்டணி அரசில் அங்கம் வகித்த பா.ஜ., அமைச்சர் சாய்சரவணன்குமார், நியமன எம்.எல்.ஏ.,க்கள் ராமலிங்கம், வெங்கடேசன், அசோக்பாபு ஆகியோர் கடந்த 27ம் தேதி ராஜினாமா செய்தனர். புதிய அமைச்சராக ஜான்குமார், நியமன எம்.எல்.ஏ.,க்களாக செல்வம், தீப்பாய்ந்தான், ராஜசேகர் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன.
இருவார இழுபறிக்கு பின், புதிய அமைச்சர் ஜான்குமார் நியமன கோப்பிற்கும், நியமன எம்.எல்.ஏ.,க்கள் கோப்பிற்கும் மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 11ம் தேதி ஒப்புதல் அளித்தது.
அதனைத் தொடர்ந்து புதிய நியமன எம்.எல். ஏ.,க்கள் இன்று மதியம் 12:40 மணிக்கு சட்டசபையில் பதவியேற்கின்றனர். அவர்களுக்கு சபாநாயகர் செல்வம் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
அதனைத் தொடர்ந்து, புதிய அமைச்சர் ஜான்குமாருக்கு கவர்னர் மாளிகையில் பகல் 1:30 மணிக்கு பதவி ஏற்பு விழா நடக்கிறது.
அவருக்கு, கவர்னர் கைலாஷ்நாதன் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
இவ்விரு பதவியேற்பு விழாவிலும் முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.