/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதிய அரசியல் கட்சி புதுச்சேரியில் உதயம்
/
புதிய அரசியல் கட்சி புதுச்சேரியில் உதயம்
ADDED : நவ 03, 2025 04:44 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் ஆர்.எல்.வி., மக்கள் முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சி உதயமாகியுள்ளது.
புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் சேர்மன் வெங்கட்ராமன், ஆர்.எல்.வி., மக்கள் முன்னேற்றக் கழகம் என்கிற புதிய கட்சியை ஆரம்பித்துள்ளார். அக்கட்சியின் கொடியையும் நேற்று அவர் அறிமுகப்படுத்தி வைத்தார்.
அவர், கூறியதாவது:
புதுச்சேரி அரசியலில் தற்போது ஒரு அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது. இதுவரை புதுச்சேரியில் ஆட்சி செய்த அனைத்துக் கட்சிகளும் மக்களுக்கான ஆட்சியை உருவாக்க தவறி விட்டன. புதுச்சேரியின் வளர்ச்சி 25 ஆண்டுகளுக்கு பின்னோக்கி சென்றுள்ளது. இதனை மாற்றி அமைப்பது காலத்தின் கட்டாயம்.
இரட்டை இன்ஜின் ஆட்சியில் கூட அனைத்து துறைகளிலும் வரலாறு காணாத ஊழல் மலிந்துள்ளது. கஞ்சா, கொலை, கொள்ளை என, சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. மக்கள் பிரச்னைகளில் அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்த இந்த அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.
ஊழலற்ற நேர்மையான ஜனநாயகரீதியான மக்களுக்கான ஒரு ஆட்சியை உருவாக்க புதிய கட்சியை ஆரம்பித்துள்ளோம் என்றார்.

