sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 காவிரி நீரை முழுமையாக பயன்படுத்த ரூ. 500 கோடியில் புதிய திட்டம்; கவர்னர்

/

 காவிரி நீரை முழுமையாக பயன்படுத்த ரூ. 500 கோடியில் புதிய திட்டம்; கவர்னர்

 காவிரி நீரை முழுமையாக பயன்படுத்த ரூ. 500 கோடியில் புதிய திட்டம்; கவர்னர்

 காவிரி நீரை முழுமையாக பயன்படுத்த ரூ. 500 கோடியில் புதிய திட்டம்; கவர்னர்


ADDED : பிப் 27, 2026 04:56 AM

Google News

ADDED : பிப் 27, 2026 04:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வில்லியனுார்: காரைக்காலில் காவிரி நீரை முழுமையாக பயன்படுத்த ரூ. 500 கோடியில் புதிய திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளதாக கவர்னர் கைலாஷ்நாதன் தெரிவித்தார்.

புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாயிகள் துறை சார்பில், அரியூரில் நடந்த 'வளர்ந்த வேளாண்மை - வளர்ந்த புதுச்சேரி' என்ற விழாவில் அவர், பேசியதாவது:

மாநிலத்தில் விவசாயிகள் பிரச்னைகளை துறை அமைச்சரிடம் இருந்தது தான் தெரிந்துகொண்டேன். விவசாய நிலங்கள் குறைந்தாலும், நெல், கரும்பு, காய்கறி சாகுபடிகள் நம்முடைய பொருளாதாரத்தின் அடித்தலமாக உள்ளது. விவசாயம் தொழில் மட்டுமல்ல, அது வாழ்க்கை முறையாகும்.

விவசாயி வயலில் விதைத்து, நாட்டின் உணவு பாதுகாப்பின் நம்பிக்கையை விதைக்கிறார். அதனால் தான் விவசாயிகளை பிரதமர் உலகத்துக்கு 'உணவு தரும் தந்தை' என கூறுகிறார். மழைகாலங்களில் விவசாயம் மற்றும் விவசாய கூலித் தொழிலாளர்களும் பாதிக்கப்படுகின்றனர்.

அதனால் கூலித் தொழிலாளர்களுக்கு தலா ரூ. 2 ஆயிரம் உதவி தொகை அரசு வழங்குகிறது. 7 டி.எம்.சி., காவிரி நீர் காரைக்காலுக்கு கிடைக்கிறது. அந்த நீரை உபயோகப்படுத்துவதே கிடையாது. இதனால் காவிரி நீரை முழுமையாக காரைக்கால் பகுதியில் உபயோகப்படுத்த ரூ.500 கோடியில் புதிய திட்டம் வடிவமைக்கப்பட்டு, வாய்க்கால்கள் துார்வார நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் காவிரி நீர் வீணாகாமல் சேமிக்கலாம்.

விவசாயத்துக்கும், விவசாயிகளுக்கும் கொடுக்கப்படும் நலத்திட்ட உதவிகள், உணவு பாதுகாப்புக்கு நாம் செய்யும் முதலீடாகும். விவசாயிகளை பாதுகாப்பது நம்முடைய கடமை. இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us