ADDED : ஆக 04, 2025 07:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருபுவனை : சின்னபேட் பகுதியில் ரூ.22.66 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட புதிய மின் மாற்றியை அங்காளன் எம்.எல்.ஏ., இயக்கி வைத்தார்.
திருபுவனை, சின்னபேட் பகுதியில் 22.66 லட்சம் ரூபாய் மதிப்பில், அட்டவணை இனத்தவர் சிறப்பு கூறு நிதியின் கீழ் புதிய மின் மாற்றி அமைக்கப்பட்டது. இதன் துவக்க விழா நடந்தது. அங்காளன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, புதிய மின் மாற்றியை இயக்கி வைத்தார்.
விழாவில் மின்துறை தெற்கு பிரிவு செயற்பொறியாளர் கிருஷ்ணசாமி, உதவி பொறியாளர் பன்னீர்செல்வம், இளநிலை பொறியாளர் பழனிவேல் உடனிருந்தனர்.