தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதிய டிரான்ஸ்பார்மர் எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு

 புதிய டிரான்ஸ்பார்மர் எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு

 புதிய டிரான்ஸ்பார்மர் எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு


ADDED : ஜூன் 14, 2026 09:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 14, 2026 09:45 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கதிர்காமம் தொகுதியில் புதிய டிரான்ஸ்பார்மரை அழகானந்தம் எம்.எல்.ஏ., இயக்கி துவக்கி வைத்தார்.

கதிர்காமம் தொகுதி, மணக்குள விநாயகர் நகர், சாஸ்திரி நகர் பகுதிகளில் நீண்டகாலமாக மின் பற்றாக்குறை பிரச்னை இருந்து வந்தது.

இதுகுறித்து தொகுதி எம்.எல்.ஏ., அழகானந்திடம் அப்பகுதி மக்கள் முறையிட்டனர். இதையடுத்து அப்பகுதிகளுக்கு ரூ.22 லட்சம் மதிப்பில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது.

இந்த மின்மாற்றி துவக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. அழகானந்தம் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, மின்மாற்றியை இயக்கி வைத்தார். மின்துறை உதவி பொறியாளர் திலகராஜ், இளநிலை பொறியாளர் செல்வராஜ், மென்பொருள் ஊழியர்கள், மணக்குள விநாயகர் குடியிருப்பு நலச்சங்க நிர்வாகிகள், அழகு அறக்கட்டளையை சேர்ந்தவர்கள் உடன் இருந்தனர்.

தொடர்ந்து பூமியான்பேட்டை மாரியம்மன் கோவில் வீதி, அன்னை அப்பார்ட்மெண்ட், அன்னை இந்திரா வீதி, அம்பேத்கர் வீதி, புது தெரு, மேட்டு தெரு, புத்தர் வீதி, உழந்தை ஏரிபாதை, ராகவேந்திரர் நகர் செல்லும் நுழைவாயில் பிரதான சாலையில்தெரு மின் விளக்குகள் அமைக்க மின்துறை அதிகாரிகளுக்கு அழகானந்தம் எம்.எல்.ஏ., உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us