/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காலாப்பட்டு தொகுதியில் ரூ.37.29 கோடியில் புதிய பணிகள் : முதல்வர் துவக்கி வைப்பு
/
காலாப்பட்டு தொகுதியில் ரூ.37.29 கோடியில் புதிய பணிகள் : முதல்வர் துவக்கி வைப்பு
காலாப்பட்டு தொகுதியில் ரூ.37.29 கோடியில் புதிய பணிகள் : முதல்வர் துவக்கி வைப்பு
காலாப்பட்டு தொகுதியில் ரூ.37.29 கோடியில் புதிய பணிகள் : முதல்வர் துவக்கி வைப்பு
ADDED : டிச 09, 2025 05:57 AM

புதுச்சேரி: காலாப்பட்டு தொகுதியில் 37.29 கோடி ரூபாய் செலவில், குடிநீர், சாலை மற்றும் வடிகால் வாய்க்கால் மேம்பாட்டு பணிகளை, முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.
புதுச்சேரி பொதுப்பணித்துறை பொது சுகாதார கோட்டம் சார்பில், காலாப்பட்டு தொகுதி பிள்ளைச்சாவடி, சின்னகாலாப்பட்டு பகுதிகளுக்கு தேசிய வீட்டு வசதி வங்கி நிதியுதவியுடன், 28.67 கோடி ரூபாய் செலவில், மேல்நிலை மற்றும் கீழ்நிலை நீர் தேக்கத் தொட்டி,புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைகழக வளாகத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, 3 புதிய ஆழ்துளை கிணறுகள் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளபட உள்ளது.
கருவடிக்குப்பம் சிவாஜி சிலை சந்திப்பு முதல் கல்லுாரி சாலை வரை 1100 மீட்டர் நீளத்திற்கு, 8.62 கோடி ரூபாய் செலவில், இருபுறமும் புதிய கான்கி ரீட் 'யு' வடிவ வாய்க்கால் அமைத்து, தார் சாலையை மேம்படுத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இப்ப ணிகளுக்கான பூமிபூஜை விழா நேற்று நடந்தது.
இதில், முதல்வர் ரங்க சாமி, அமைச்சர் லட்சுமிநாராயணன், கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து வைத்து பணிகளை துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் வீரசெல்வம், கண்காணிப்பு பொறியாளர் சுந்தரமூர்த்தி, செயற்பொறியாளர்கள் பக்தவச்சலம், சீனுவாசன், உதவி பொறியாளர்கள் பாலாஜி, ஸ்ரீதரன், சுதர்சனம், இளநிலை பொறியாளர் லோகநாதன் மற்றும் அதிகாரிகள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

