ADDED : நவ 20, 2024 05:30 AM
தவறி விழுந்து ஒருவர் சாவு
விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 50. இவர் நேற்று பகல் 11:00 மணியளவில் வீட்டின் அருகே சாலையில் நடந்து சென்றபோது, தவறி கீழே விழுந்தார். இதில், படுகாயமடைந்த அவரை மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று பகல் 3:00 மணியளவில் இறந்தார். கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
ஊழியர் மர்ம சாவு
திண்டிவனம்: புதுக்கோட்டை மாவட்டம், இளப்பூர், அண்ணா பண்ணை பகுதியைச் சேர்ந்தவர் சிரில், 40; இவர், திண்டிவனம், பொன்னிநகர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி, அதே பகுதியில் உள்ள எலக்ட்ரிக் கடையில் வேலை செய்து வந்தார். போதைக்கு அடிமையான இவர், வீட்டில் இறந்த நிலையில் கிடந்தார். டவுன் போலீசார் வழக்குப் பதிந்து மது போதையில் இறந்தாரா அல்லது வேறு காரணமா என விசாரித்து வருகின்றனர்.
கல்லுாரி மாணவி மாயம்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், கோலியனுார் அடுத்த தொடர்ந்தனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகர் மகள் சிவசங்கரி,18; இவர், மயிலம் பகுதியில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.பி.ஏ., முதலாமாண்டு படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் வீட்டிலிருந்து, கல்லுாரிக்கு செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
பள்ளி ஊழியர் வீட்டில் திருட்டு
கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் தனியார் பள்ளி குடியிருப்பில் வசிப்பவர் மணிகண்டன் மனைவி மகேஸ்வரி,36; பள்ளியின் பஸ் கண்டக்டராக பணிபுரிகிறார். இவர், கடந்த 10ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு, தாய் வீட்டிற்கு சென்றிருந்தார். இவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ஏழரை சவரன் நகை, ஒரு காஸ் சிலிண்டர், 10 பட்டு புடவைகள், 30 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். புகாரின்பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

