ADDED : டிச 23, 2024 04:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார் : மழைக் காலங்களில் ஏற்படும் வைரஸ் காய்ச்சலை தடுக்கும் பொருட்டு, மண்ணாடிப்பட்டு தொகுதி தி.மு.க., சார்பில், நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது.
திருக்கனுார் பஜார் வீதியில் நடந்த நிகழ்ச்சியில், மாநில பொதுக்குழு உறுப்பினர் செந்தில்வேலன் தலைமை தாங்கி, பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கினார். இதில், தி.மு.க., நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

