/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மகிளா காங்., தலைவியாக நிஷா பொறுப்பேற்பு
/
மகிளா காங்., தலைவியாக நிஷா பொறுப்பேற்பு
ADDED : மார் 17, 2025 02:37 AM

புதுச்சேரி: புதுச்சேரி மாநில மகிளா காங்.,அணி தலைவியாகநிஷா பொறுப்பேற்றார்.
புதுச்சேரி கம்பன் கலையரங்கில் நடந்த பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு, மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வர் நாராயணசாமி முன்னிலை வகித்தனர். அகில இந்திய மகிளா காங்., தலைவி அல்கா லாம்பாமுன்னிலையில், புதுச்சேரி மாநில மகளிரணி தலைவியாக நிஷா பதவியேற்றார்.
புதுச்சேரி பொறுப்பாளர்களான அகில இந்திய காங்., பொதுச்செயலாளர் கிரீஸ், செயலாளர் சூரஜ், வைத்தியநாதன் எம்.எல்.ஏ., மற்றும் முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், பெத்தபெருமாள், முன்னாள் துணை சபாநாயகர் பாலன், முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், முன்னாள் சேர்மன் கார்த்திகேயன், காங்., அனைத்து பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.