/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வருங்கால வைப்பு நிதி ஆணையம் மூலம் நிதி ஆப்கே நிகட் 2.0 சிறப்பு முகாம்
/
வருங்கால வைப்பு நிதி ஆணையம் மூலம் நிதி ஆப்கே நிகட் 2.0 சிறப்பு முகாம்
வருங்கால வைப்பு நிதி ஆணையம் மூலம் நிதி ஆப்கே நிகட் 2.0 சிறப்பு முகாம்
வருங்கால வைப்பு நிதி ஆணையம் மூலம் நிதி ஆப்கே நிகட் 2.0 சிறப்பு முகாம்
ADDED : அக் 26, 2024 05:49 AM
புதுச்சேரி; வருங்கால வைப்பு நிதி ஆணையம் மூலம் நிதி ஆப்கே நிகட் 2.0 சிறப்பு முகாம் வரும் 28 ம் தேதி நடக்கிறது.
புதுச்சேரி வருங்கால வைப்பு நிதி ஆணைய மண்டல அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரி மண்டல இ.பி.எப்.ஓ., மூலம் நிதி ஆப்கே நிகட் (வைப்பு நிதி உங்கள் அருகில்) எனும் சிறப்பு முகாம் வரும் 28ம் தேதி காலை 9:00 மணி முதல் மாலை 5:45 வரை நடக்கிறது.
புதுச்சேரியில் அமலோர்பவம் மேல்நிலைப்பள்ளி, அருமை பிரைமரி பிளாக், எண்:8, ராஜராஜேஸ்வரி தெரு, வாணாரப்பேட்டையிலும், காரைக்கால் சேம்பர் ஆப் காமர்ஸ், 113, சவுத் ஸ்ட்ரீட், கோவில்பட்டு, காரைக்கால் பகுதிகளிலும் முகாம் நடக்கிறது.
முகாமில் இ.பி.எப் மற்றும் எம்.பி., சட்டம் 1952ன் சட்டவிதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் படி, புதிதாக துவங்கப்படும் நிறுவனங்களுடைய முதலாளிகள் மற்றும் தொழிலாளர்களின் கடமைகள், பொறுப்புகளை விளக்குதல், தொழிலாளர்களுக்கான ஆன்லைன் சேவைகள் விளக்கப்படும்.
ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் முதலாளிகளிடமிருந்து வரும் குறைகளை நிவர்த்தி செய்தல், ஓய்வூதியர்களுக்கு டிஜிட்டல் வாழ்க்கை சான்றிழ்தகளை சமர்ப்பித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும், முன்பணங்களை தாக்கல் செய்தல் குறித்தும் விளக்கம் அளிக்கப்படுகிறது.
முகாமில் பங்குவபற விரும்புபவர்கள் தங்களின் விவரங்களை Google Form இல் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது. Google Form ஐ https://docs.google.com/forms/d/1VhxDZxAkX_kA3c1b-_AiUOi-meMxvUMvU0m7y4QyUx4/edit என்ற URL மூலமாக அணுகலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.