/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
என்.எல்.சி., தொழிலாளர்கள் போராட்டம் அமைதி பேச்சுவார்த்தை தோல்வி
/
என்.எல்.சி., தொழிலாளர்கள் போராட்டம் அமைதி பேச்சுவார்த்தை தோல்வி
என்.எல்.சி., தொழிலாளர்கள் போராட்டம் அமைதி பேச்சுவார்த்தை தோல்வி
என்.எல்.சி., தொழிலாளர்கள் போராட்டம் அமைதி பேச்சுவார்த்தை தோல்வி
ADDED : செப் 21, 2024 12:41 AM

கடலுார்,: நெய்வேலி என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர்களின் போராட்டம் தொடர்பாக, ஆர்.டி.ஓ., தலைமையில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
கடலுார் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், நெய்வேலி என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர்களின் போராட்டம் தொடர்பான பேச்சுவார்த்தை நடந்தது. ஆர்.டி.ஓ., அபிநயா தலைமை தாங்கினார். நெய்வேலி டி.எஸ்.பி., சபிபுல்லா, என்.எல்.சி., பொது மேலாளர் திருக்குமறன், உதவி துணை பொதுமேலாளர் உமாமகேஸ்வரன், ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்க தலைவர் அந்தோணி செல்வராஜ், சிறப்பு செயலாளர் சேகர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பின், ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க சிறப்பு செயலாளர் சேகர் நிருபர்களிடம் கூறியதாவது:
என்.எல்.சி.,யில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள், 20 சதவீத போனஸ் கேட்டு கடந்த 2 நாட்களாக சுரங்க அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்பிரச்னைக்கு சுமூக தீர்வு காண கடலுார் ஆர்.டி.ஓ., தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது.
அதில், என்.எல்.சி., நிர்வாகம், அதிகாரிகள் கூறியதை ஏற்க மறுத்துவிட்டதால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து இன்று மாலை அறிவிக்கப்படும் என்றார்.