/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சர்வதேச, தேசிய அளவில் வென்றவர்களுக்கு 16 ஆண்டுகளாக உதவித்தொகை இல்லை
/
சர்வதேச, தேசிய அளவில் வென்றவர்களுக்கு 16 ஆண்டுகளாக உதவித்தொகை இல்லை
சர்வதேச, தேசிய அளவில் வென்றவர்களுக்கு 16 ஆண்டுகளாக உதவித்தொகை இல்லை
சர்வதேச, தேசிய அளவில் வென்றவர்களுக்கு 16 ஆண்டுகளாக உதவித்தொகை இல்லை
ADDED : பிப் 20, 2025 06:16 AM
விளையாட்டு வீரர்கள் நலச்சங்கம் கண்டனம்
புதுச்சேரி: சர்வதே, தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு 16 ஆண்டுகளாக உதவித்தொகை வழங்காததிற்கு, புதுச்சேரி விளையாட்டு வீரர்கள் நலச்சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சங்க தலைவர் வளவன் வெளியிட்டுள்ள அறிக்கை:
புதுச்சேரியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விளையாட்டு வளர்ச்சி ஆணையத்தால், மாநில விளையாட்டு வீரர்களுக்கு, விளையாட்டு சங்கங்களுக்கு எந்தவித நன்மை இல்லை. ஆணைய பொதுகுழு கூட்டம் என 6 முறை அறிவித்துவிட்டு, காரணம் ஏதும் இன்றி ரத்து செய்து விட்டனர்.
சர்வதேச தேசிய மற்றும் மாநில அளவில் வெற்றி பெறும் வீரர்களுக்கு 16 ஆண்டு காலமாக எந்த வித உதவித்தொகையும், ஊக்க தொகையும் வழங்காமல் காலம் கடத்துவது கண்டிக்கத்தக்கது.
விளையாட்டு வீரர்கள் விளையாடும் போது ஏற்படும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அரசு கண்டும் காணாமல் இருப்பதுடன், பண உதவி, மருத்துவ உதவி உட்பட எந்தவித உதவியும் செய்யாமல் விளையாட்டு வீரர்களை அலட்சியப்படுத்தி வருகிறது.
விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கிட்டில் சென்டாக் மேற்படிப்பில் சான்றிதழ் சரிபார்ப்பில் சில உடற்கல்வி ஆசிரியர்களை முறைகேடுகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். முறைகேட்டில் ஈடுப்படும் உடற்கல்வி ஆசிரியர்களை மாற்றி, நேர்மையான உடற்கல்வி ஆசிரியர்கள் அலுவலர்களை நியமித்து விளையாட்டு வீரர்களின் தகுதி சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

