sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 ஸ்மார்ட் மீட்டர் குறித்து அச்சப்பட தேவையில்லை; மின்துறை கண்காணிப்பு பொறியாளர் விளக்கம்

/

 ஸ்மார்ட் மீட்டர் குறித்து அச்சப்பட தேவையில்லை; மின்துறை கண்காணிப்பு பொறியாளர் விளக்கம்

 ஸ்மார்ட் மீட்டர் குறித்து அச்சப்பட தேவையில்லை; மின்துறை கண்காணிப்பு பொறியாளர் விளக்கம்

 ஸ்மார்ட் மீட்டர் குறித்து அச்சப்பட தேவையில்லை; மின்துறை கண்காணிப்பு பொறியாளர் விளக்கம்


ADDED : நவ 22, 2025 05:43 AM

Google News

ADDED : நவ 22, 2025 05:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: ஸ்மார்ட் மீட்டர் குறித்து பொதுமக்கள் அச்சப்படதேவையில்லை என, மின் துறை கண்காணிப்பு பொறியாளர் கனியமுதன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது;

புதுச்சேரி மின்துறை, அனைத்து நுகர்வோர்களின் மின் மீட்டர்களையும் மத்திய அரசின் சீரமைக்கப்பட்ட மின் விநியோகத் திட்டத்தில் ஸ்மார்ட் மீட்டர்களாக மாற்றம் செய்ய ஒப்புதல் பெறப்பட்டது.

இப்பணிகளுக்கு மத்திய அரசின் நிறுவனமான பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் கன்சல்ட்டிங் லிமிடெட் திட்ட செயலாக்க நிறுவனமாக நியமிக்கப்பட்டது. இந்த ஸ்மார்ட் மீட்டர்கள் புதுச்சேரியில் அப்ராவ எனர்ஜி நிறுவனம் மூலம் வீடுகளில் பொருத்தப்பட உள்ளது.

இத்திட்டத்த்தின் மூலமாக மீட்டரை மாற்றுவதற்காக நுகர்வோர்களிடம் கட் டணம் வசூலிக்கப்படாது. முற்றிலும் இலவசம்.

இந்த ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டால், மனித தவறுகளால் ஏற்படும் பிழைகள் மற்றும் சரியான நேரத்தில் பில் வராதது போன்ற பிரச் னைகளை தவிர்க்கபடும். நுகர்வோர்கள் தினசரி மின் பயன்பாட்டை, மொபைல்போன் செயலி மூலம் காணும் வசதியும் உள்ளது.

இத்திட்டம் அமல்படுத்தபட்டபின் தானியங்கி முறையில் ஸ்மார்ட் மீட்டர்கள் நுகர்வோர்களின் மின் தடங்கல்களை உடனுக்குடன் மின் துறையின் கன்ட்ரோல் மையத்திற்கு தகவலனுப்பும் வசதி உடையது. பொது மக்கள் புகார் செய்யாமலேயே உடனுக்குடன் சரி செய்ய வழி வகுக்கும்.

தற்போது நடைமுறையில் உள்ள கட்டண வரிகள் எவ்வித மாற்றமுமின்றி, போஸ்ட்பெய்டு முறையிலேயே தொடரும். முதற்கட்டமாக இவ்வகையான மீட்டர்கள் சோலார் பொருத்தப்பட்ட நுகர்வோர்கள், அரசுத்துறை, அரசு சார்ந்த உபயோகம், உயர் மின்அழுத்த நுகர்வோர்கள், பழுதடைந்த மீட்டர் உள்ள நுகர்வோர்கள் மற்றும் அதிக மின் பயன்பாட்டார்களுக்கு பொருத்தப்படுகிறது. புதிய மின் இணைப்பு கோருவோர்களுக்கு மற்றும் விருப்பப்படும் நுகர்வோர்களுக்கும் இவை பொருத்தப்படும்.

மீட்டர்களின் தரம் ஏற்கனவே தேசிய தரக்கட்டுபாடு மையத்தின் மூலமாக உறுதி செய்யப்பட்ட நிலையில், 10 சதவீத நுகர்வோர்களின் வீட்டில், மூன்று மாதங்களுக்கு பழைய மீட்டருடன் ஸ்மார்ட் மீட்டரையும் பொருத்தி, மின் பயன்பாட்டை ஒப்பீடு செய்து, பிழை ஏதுமில்லை என்பது உறுதி செய்யப்படும்.

எனவே மின் நுகர்வோர்கள் அச்சமின்றி, தற்போது உள்ள போஸ்ட்பெய்டு முறையிலேயே செயல்படுத்தப்படும் இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும்.

இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us