/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சவுடாம்பிகை கோவிலுக்கு சிங்க வாகனம் வழங்கல்
/
சவுடாம்பிகை கோவிலுக்கு சிங்க வாகனம் வழங்கல்
ADDED : நவ 22, 2025 05:43 AM

புதுச்சேரி: முத்தியால்பேட்டை, சவுடாம்பிகை கோவிலுக்கு சிங்க வாகனத்தினை முத்தியால்பேட்டை தொகுதி காங்., பொறுப்பாளர் ஈரம் ராஜேந்திரன் வழங்கினார்.
முத்தியால்பேட்டை, சவுடாம்பிகை கோவிலில் அம்மன் பண்டிகை விழா 20ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. 22ம் தேதி வரை நடக்கும் விழாவில் தினமும் காலை அம்மனுக்கு சிறப்பு அபி ேஷக ஆராதனை, இரவு சுவாமி வீதியுலா நடக்கி றது.
நேற்று காலை 8:00 மணிக்கு சக்தி கலசத்துடன் நகர்வலம் வருதல், 12:00 மணிக்கு ஏழை மாரியம்மன் கோவிலில் இருந்து சவுடாம்பிகை அம்மனுக்கு அலகு பானையில் கங்கை நீர் கொண்டு வருதல், 12:30 மணிக்கு அம்மனுக்கு அலகு அபி ேஷகம், தொடர்ந்து அலகு நிறுத்துதல், 2:00 மணிக்கு மகா ஜோதி மாவு இடித்தல், இரவு 7:30 மணிக்கு அம்மன் வீதியுலா நடந்தது.
விழாவில் முத்தியால்பேட்டை தொகுதி காங்., பொறுப்பாளர் ஈரம் ராஜேந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர் கோவிலுக்கு சிங்க வாகனத்தினை நன்கொடையாக வழங்கினர்.
இன்று இரவு 7:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம், மஞ்சள் நீராட்டு விழா, தொடர்ந்து கொடி இறக்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.

