/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வெள்ளத்தால் தத்தளித்த பாகூர் பகுதியில் இயல்பு நிலை திரும்புகிறது: முகாமில் தங்கியிருந்தவர்கள் வீடுகளுக்கு சென்றனர்
/
வெள்ளத்தால் தத்தளித்த பாகூர் பகுதியில் இயல்பு நிலை திரும்புகிறது: முகாமில் தங்கியிருந்தவர்கள் வீடுகளுக்கு சென்றனர்
வெள்ளத்தால் தத்தளித்த பாகூர் பகுதியில் இயல்பு நிலை திரும்புகிறது: முகாமில் தங்கியிருந்தவர்கள் வீடுகளுக்கு சென்றனர்
வெள்ளத்தால் தத்தளித்த பாகூர் பகுதியில் இயல்பு நிலை திரும்புகிறது: முகாமில் தங்கியிருந்தவர்கள் வீடுகளுக்கு சென்றனர்
ADDED : டிச 05, 2024 06:53 AM

பாகூர்: மூன்று நாட்களாக வெள்ளத்தில் தத்தளித்த பாகூர் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப துவங்கி உள்ளனர்.
பெஞ்சல் புயல் காரணமாக புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் கன மழை பெய்தது. இதனால், சாத்தனுார் அணை திறக்கப்பட்டதால், தென்பெண்ணையாற்றில் வரலாறு காணாத அளவிற்கு காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பாகூர், குருவிநத்தம், கொம்மந்தான்மேடு, பெரிய ஆராய்ச்சிக்குப்பம், சோரியாங்குப்பம் கிராமங்களை வெள்ளம் புரட்டி போட்டது. வீடுகள் அனைத்தும் சேதமானது.
2ம் நாள் ஏற்பட்ட வெள்ளத்தில் முள்ளோடை, கன்னியக்கோவில், மதிக்கிருஷ்ணாபுரம், அரங்கனுார், சேலியமேடு, மேலழிஞ்சிப்பட்டு, ரெட்டிச்சாவடி உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீடுகள், வயல்வெளிகள் தண்ணீரில் மூழ்கியது. 3வது நாளான நேற்று வெள்ள நீர் படிப்படியாக வடிய துவங்கியது. முகாமில் தங்கி இருந்த மக்கள் தங்களின் வீடுகளுக்கு திரும்பினர்.
வெள்ளத்தில் சிக்கி இடிந்து மோசமான நிலையில் உள்ள வீடுகளில் மிச்ச மீதி இருந்த அரிசி, பருப்பு மற்றும் பாத்திரங்கள் சாலையில் கொட்டி உலர்த்தி வருகின்றனர். மாணவர்கள் தங்களின் பாட புத்தகங்களை வெயிலில் காய வைத்தனர். வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு வீடுகளில் 1 அடி உயரத்திற்கு சேர்ந்துள்ள சேறு சகதிகளை சுத்தம் செய்து வருகின்றனர்.
சாலைகள் சேதம்:
வெள்ளத்தால் பாகூர் காமராஜர் நகரில் மூதாட்டி இந்திராணி, 97; மவீடு இடிந்து தரைமட்டமானது. சோரியாங்குப்பம் நாவம்மாள் கோவில் வீதியில் பலரது வீடுகள் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. குருவிநத்தம் சித்தேரி சாலை, புதுச்சேரி - கடலுார் சாலை, கிருமாம்பாக்கம், முள்ளோடை, கங்கனாங்குப்பம் உள்ளிட்ட பல சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் கவலை;
வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட மணல் நெல் வயல்களில் பரவி கிடக்கிறது. இதனால், தண்ணீர் வடித்தாலும் நெல் பயிர்கள் மீண்டும் வளருமா என்பது கேள்விக்குறியாக உள்ளதாக விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
வடியாத வெள்ளம்:
பாகூர், சோரியாங்குப்பம், இருளஞ்சந்தை, காட்டுக்குப்பம் உள்ளிட்ட பல கிராமங்களில் தாழ்வான குடியிருப்பு பகுதிகளை சுற்றி வெள்ளநீர் தேங்கி உள்ளது. வெள்ள நீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.