/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஓட்டலில் ரூ.1.08 லட்சம் திருட்டு வடமாநில தொழிலாளிக்கு வலை
/
ஓட்டலில் ரூ.1.08 லட்சம் திருட்டு வடமாநில தொழிலாளிக்கு வலை
ஓட்டலில் ரூ.1.08 லட்சம் திருட்டு வடமாநில தொழிலாளிக்கு வலை
ஓட்டலில் ரூ.1.08 லட்சம் திருட்டு வடமாநில தொழிலாளிக்கு வலை
ADDED : ஏப் 18, 2025 04:14 AM
புதுச்சேரி: தனியார் ஓட்டலில் வேலை செய்த புனேவை சேர்ந்த வாலிபர், ரூ. 1.08 லட்சத்தை திருடியது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாணரபேட்டை, ராசு உடையார் தோட்டத்தை சேர்ந்தவர் அன்புசெல்வன், 32; ஒயிட் டவுனில் உள்ள தனியார் ஓட்டல் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்த ஓட்டலின் வரவேற்பாளராக மகாராஷ்டிரா மாநிலம் பூனேவை சேர்ந்த ஆகாஷ், 35; வேலை செய்து வருகின்றார். இவர் வரவேற்பாளர் பணியுடன், வாடிக்கையாளர் சேவையையும், அவ்வப்போது ஓட்டல் கணக்குகளை கவனித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த பிப். 19 ம் தேதி அன்புசெல்வன் அவசர வேலையாக வெளியே சென்றதால், ஆகாைஷ கணக்குகளை கவனிக்க சொல்லிவிட்டு சென்றுள்ளார். பின்னர், அன்று இரவு 10:00 மணிக்கு அன்புசெல்வனை தொடர்பு கொண்ட ஆகாஷ், ஓட்டல் கணக்குகளை முடித்து விட்டு கிளம்புவதாக தெரிவித்துள்ளார். ஆனால், மறுநாள் 20ம் தேதி மதியம் 1:00 மணிக்கு வேலைக்கு வரவேண்டிய ஆகாஷ் ஹோட்டலுக்கு வரவில்லை. அவர் தங்கியிருந்த அறையிலும் இல்லை. இதனால், சந்தேகமடைந்து ஓட்டல் கணக்குகளை சரிபார்த்தபோது, அதிலிருந்த 1 லட்சத்து 8 ஆயிரத்து 159 ரூபாய் காணவில்லை.
இதுகுறித்து அன்புசெல்வன் அளித்த புகாரின் பேரில், பெரியக்கடை போலீசார் வழக்குப் பதிந்து, ஓட்டலில் இருந்த சி.சி.டி.வி., கேமராவை பார்வையிட்டதில், ஆகாஷ் பணத்தை திருடி செல்வது தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவாகியுள்ள ஆகாைஷ போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

