ADDED : நவ 15, 2025 10:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: மத்தியபிரதேசம், போபால்,சிவாஜி ஹேசூர் பகுதியை சேர்ந்தவர் கமலேஷ் மர்மட், 52. இவர், கடந்த 11ம் தேதி புதுச்சேரிக்கு வந்தார். சுய்ப்ரன் வீதியில் உள்ள தனியார் விடுதியில் ரூம் எடுத்து தங்கியுள்ளார்.
நேற்று முன்தினம் காலை வெளியே சென்று விட்டு, விடுதிக்கு திரும்பினார். அவர் நீண்ட நேரமாக வெளியே வராததால் ஊழியர்கள், மாற்று சாவி மூலம் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். கமலேஷ் மர்மட் மின்விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. புகாரின் பேரில், ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

