/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சட்டசபைக்கு வராத அதிகாரிகளுக்கு நோட்டீஸ்; சபாநாயகர் அதிரடி
/
சட்டசபைக்கு வராத அதிகாரிகளுக்கு நோட்டீஸ்; சபாநாயகர் அதிரடி
சட்டசபைக்கு வராத அதிகாரிகளுக்கு நோட்டீஸ்; சபாநாயகர் அதிரடி
சட்டசபைக்கு வராத அதிகாரிகளுக்கு நோட்டீஸ்; சபாநாயகர் அதிரடி
ADDED : மார் 20, 2025 04:54 AM

புதுச்சேரி: சட்டசபைக்கு அதிகாரிகள் உரிய நேரத்தில் வந்துள்ளனரா என சபாநாயகர் செல்வம் ஆய்வு செய்தார்.
புதுச்சேரி சட்டசபை கூட்டத் தொடரில் அரசு செயலர்கள், இயக்குநர்கள் கட்டாயம் இருக்க வேண்டும். விடுமுறை நாட்களில் அமைச்சர்கள் சட்டசபைக்கு வந்தாலும் கட்டாயம் வந்து, பதிலளிக்க வேண்டும் என, சபாநாயகர் செல்வம் உத்தரவிட்டு இருந்தார்.
ஆனாலும், அரசு செயலர்கள், இயக்குநர்கள் வரவில்லை என, புகார் எழுந்தது. அதையடுத்து நேற்று முன்தினம் சபாநாயகர் செல்வம் அரசு அதிகாரிகளுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்தார். தொடர்ந்து நேற்று சட்டசபைக்கு அதிகாரிகள் வந்துள்ளனரா என்பதை சபாநாயகர் செல்வம் கேட்டறிந்தார். சட்டசபைக்கு வராத அதிகாரிகளை துறை தலைவர்கள் விளக்கம் கேட்க வேண்டும். உரிய விளக்கம் அளிக்காத அதிகாரிகளுக்கு நோட்டீஸ் வழங்க சபாநாயகர் செல்வம் உத்தரவிட்டார்.