sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பொது கூட்டங்கள் நடத்தும் இடங்கள் அறிவிப்பு: முன் அனுமதி பெற அறிவுறுத்தல்

/

பொது கூட்டங்கள் நடத்தும் இடங்கள் அறிவிப்பு: முன் அனுமதி பெற அறிவுறுத்தல்

பொது கூட்டங்கள் நடத்தும் இடங்கள் அறிவிப்பு: முன் அனுமதி பெற அறிவுறுத்தல்

பொது கூட்டங்கள் நடத்தும் இடங்கள் அறிவிப்பு: முன் அனுமதி பெற அறிவுறுத்தல்


ADDED : மார் 25, 2024 05:08 AM

Google News

ADDED : மார் 25, 2024 05:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரியில் அரசியல் கட்சியினர் பொதுக்கூட்டங்களை நடத்துவதற்கான இடங்களை மாவட்ட தேர்தல் அலுவலகம் அறிவித்துள்ளது.

புதுச்சேரி லோக்சபா தேர்தல் ஏப்., 19ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20 ம்தேதி துவங்கி நடந்து வருகின்றது. தேர்தல் அறிவிப்பு காரணமாக தேர்தல் நன்னடத்தை விதிகள் புதுச்சேரியில் அமல் படுத்தப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் புதுச்சேரியில் பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கான இடங்களை நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகளுடன் இணைந்து மாவட்ட தேர்தல் அலுவலகம் இறுதி செய்து பட்டியலை வெளியிட்டுள்ளது.

புதுச்சேரி நகராட்சி


கடலுார் சாலை, பிராவிடன்ஸ் மால் எதிரில் உள்ள சிங்காரவேலர் சதுக்கம், புதிய துறைமுக வளாகம், நெல்லிதோப்பு மார்கெட் வீதி, தேங்காய் திட்டு மெயின் ரோடு மேட்டு தெரு சந்திப்பு.

உழவர்கரை நகராட்சி


லாஸ்பேட்டை ஹெலிபேடு, தாகூர் கலை கல்லுாரி மைதானம், ராஜிவ் சிலை அருகில் உள்ள தட்டாஞ்சாவடி ஒழுங்கு முறை விற்பனை கூட வளாகம், மேட்டுபாளையம் புறவழிசாலை -பிப்டிக் சாலை சந்திப்பு.

அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து


அரியாங்குப்பம் ஆர்.கே.,நகர் விளையாட்டு மைதானம், வீராம்பட்டினம் தேர் முட்டு, மணவெளி மந்தை திடல், பூரணாங்குப்பம் மந்தை திடல், அபிஷேகப்பாக்கம் அம்பேத்கர் சிலை அருகில்.

பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து


கரையாம்புத்துார் சுப்ரமணிய சாமி கோவில் எதிரில், மணமேடு கலையரங்கம், குருவிநத்தம் மாரியம்மன் கோவில் திடல், சோரியாங்குப்பம் செங்கேணியம்மன் கோவில் திடல், பாகூர் மணிகூண்டு அருகில், சேலியமேடு கலையரங்கம், கிருமாம்பாக்கம் மந்தைவெளி திடல், பனித்திட்டு கலையரங்கம், பிள்ளையார்குப்பம் மாரியம்மன் கோவில் திடல், கன்னியக்கோவில் பச்சைவாழியம்மன் கோவில் திடல், மதிகிருஷ்ணாபுரம் கொரவள்ளி மேடு மெயின் ரோடு.

மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து


செவ்வாய்கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் மதகடிப்பட்டு சந்தை திடலில் பொதுக்கூட்டங்கள் நடத்தலாம். கொண்டா ரெட்டிபாளையம் பஸ் நிறுத்தம் அருகில், குப்பம் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அருகில் களம்.

நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து


மடுகரை மந்தைவெளி திடல், பெரியபேட் கலையரங்கம், சூரமங்கலம்பேட் கலையரங்கம் திடல், சூரமங்கலம் கலையரங்கம் திடல், கரியமாணிக்கம் மணிக்கூண்டு திடல், நெட்டப்பாக்கம் சிவன் கோவில் திடல், கலையரங்கம் திடல், ஏரிப்பாக்கம் ஏரி நத்தமேடு திடல், கல்மண்டபம் சமுதாயநல கூட திடல், கல்மண்டபம் பேட் கோவில் திடல், பண்டசோழ நல்லுார் முத்துமாரியம்மன் கோவில் திடல், வடுகுப்பம் கலையரங்கம்.

ஏம்பலம் பெருமாள் கோவில் திடல், கலையரங்கம் திடல் - அய்யானார் கோவில் சாலை, செம்பியப்பாளையம் மந்தைவெளி திடல், புதுக்குப்பம் கலையரங்கம் திடல், கரிக்கலாம்பாக்கம் கோட்டைமேடு திடல், கரிக்கலாம்பாக்கம் பேட் கலையரங்கம் திடல், கோர்க்காடு காலனி கலையரங்கம் திடல்.

வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து


சேதாரப்பட்டு மந்தைவெளி திடல், கரசூர் வினாயகர் கோவில் எதிரில், தொண்டமாநத்தம் கோவில் தேர் திடல் எதிரில், தொண்டமாநத்தம் அம்பேத்கர் திடல், ராமநாதபுரம் மாரியம்மன் கோவில் எதிரில், பிள்ளையார்குப்பம் கூத்தாண்டவர் கோவில் திடல், கூடப்பாக்கம் மந்தைவெளி திடல், அகரம் ஐயனார் கோவில் அருகில், சேந்தநத்தம்பேட் மாரியம்மன் கோவில் அருகில், பொறையூர்பேட் களத்துமேட்டு திடல்.

குருமாம்பேட் வீட்டு வசதி வாரிய திடல், வில்லியனுார் தென்கோபுர வீதி, கீழ் சன்னதி வீதி, ஒதியம்பட்டு கலையரங்கம், உறுவையாறு கலையரங்கம், கீழுர் கலையரங்கம், திருக்காஞ்சி அருகில், கீழ்அக்ரஹாரம் கலையரங்கம், மேல்சாத்தமங்கலம் கலையரங்கம், அரியூர் பேட் சமுதாயநல கூடம் அருகில், மங்கலம்பேட் மாரியம்மன் கோவில் திடல்.

இந்த இடங்களில் அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் பொதுக் கூட்டங்களை நடத்த மாவட்ட தேர்தல் அதிகாரியின் முன் அனுமதி பெற வேண்டும் என, மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us